டிரம்ப் உத்தரவால் மட்டுமே வட்டியை குறைக்க மாட்டோம்
அமெரிக்காவின் பொருளாதார நிலவரத்தைப் பொறுத்தே, வட்டி விகித மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும்; இந்த நடைமுறையில் எப்போதும் மாற்றம் இருக்காது என்று பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். கடன் வட்டி விகிதத்தை குறைக்குமாறு பாவலை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்கப் போவதில்லை என ஜெரோம் பாவல் சூசகமாக தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ஜேக்சன் ஹோல் பொருளாதார கொள்கை கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், பொருளாதார நிலவரத்தைப் பொறுத்து, செப்டம்பரில் கடன் வட்டி குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்தாண்டு மே மாதத்துடன் ஜெரோம் பாவலின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், இதுவே இந்த கருத்தரங்கில் அவரது இறுதி உரையாகும்.