வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தொண்ணூறு நாட்களுக்கு போடப்படும் வங்கி FD ஐ விட நிச்சயம் சிறப்பானது.....
மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றான லிக்விட் பண்ட் குறுகிய கால முதலீட்டிற்கான பாதுகாப்பான வாய்ப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அண்மை காலமாக லிக்விட் பண்ட் முதலீடு நல்ல பலனை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்த முதலீடு சராசரியாக, 7.28 சதவீத பலன் அளித்தது. மேலும், செப்டம்பர் மாதம் லிக்விட் பண்ட்களில் நிகர முதலீடு அதிகரித்துள்ளது. லிக்விட் பண்ட் முதலீடு கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இந்த வகை முதலீடு தொடர்பான அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்வது அவசியம்.குறுகிய காலம்:
லிக்விட் பண்ட்கள் கடன்சார் மியூச்சுவல் பண்ட் பிரிவின் கீழ் வருகின்றன. இந்த வகை நிதிகள், குறுகிய கால முதிர்வு கொண்ட கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன. முதிர்வு காலம், 91 நாட்களுக்கு குறைவாக இருக்கும். அரசு பத்திரங்கள், டெபாசிட் சான்றிதழ்கள், வர்த்தக பத்திரங்கள் இதில் அடங்கும்.பாதுகாப்பு:
பொதுவாக லிக்விட் பண்ட் குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அதிக பலன் அளிக்கும் குறுகிய கால முதலீடுகளில் முதலீடு செய்வதால், பாதுகாப்பானதாக அமைகின்றன. மேலும், இவற்றின் பணமாக்கல் அம்சமும் மேம்பட்டது. தேவைப்படும் போது உடனடியாக முதலீட்டை விலக்கி கொள்ளலாம்.சாதக அம்சங்கள்:
பாதுகாப்பு, பலன் மற்றும் பணமாக்கல் போன்ற அம்சங்களில் சமநிலை எதிர்பார்ப்பவர்களுக்கு லிக்விட் பண்ட்கள் பல்வேறு சாதக அம்சங்களை கொண்டுள்ளன. அதிக தரம் வாய்ந்த குறுகிய கால கடன்சார் சாதனங்களில் முதலீடு செய்வதால், இவை அதிக பலன் அளிக்கும் வாய்ப்பு கொண்டுள்ளன.நிதி இலக்கு:
லிக்விட் பண்ட்கள் குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றவை என்பதால், சமபங்கு நிதிகள் போல இவை நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்க உகந்தவை அல்ல. இடைப்பட்ட காலத்தில் முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். அவசர கால நிதிக்கான முதலீட்டிற்கு பொருத்தமாக இருக்கும்.ஏற்ற நிதி:
லிக்விட் பண்ட்களின் தன்மையை புரிந்து கொண்டு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். இவை குறைந்த இடர் கொண்டவை. குறுகிய கால முதலீட்டிற்கு அனைவரும் நாடலாம். குறுகிய கால முதலீட்டிற்கான மற்ற வாய்ப்புகளையும் பரிசீலித்து பார்த்து தேர்வு செய்யலாம்.
தொண்ணூறு நாட்களுக்கு போடப்படும் வங்கி FD ஐ விட நிச்சயம் சிறப்பானது.....