உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தகதக தங்கம் பாதுகாப்பான முதலீடாக தொடருமா?

தகதக தங்கம் பாதுகாப்பான முதலீடாக தொடருமா?

மும்பை,:தங்கத்தின் விலை ஜாண் சறுக்கினால், முழம் ஏறி, புதிய உச்சத்தை தொடுவது தொடர்கதையாகி வருகிறது. அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?உலக நாடுகள் இடையே இறக்குமதி வரி விதிப்பில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகபட்சம் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்தார். இதனால், பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற வர்த்தக போக்கு காணப்படுகிறது.கரன்சி சந்தையும் சொல்லிக் கொள்ளும்படி லாபம் பெற்றுத் தருவதாக இல்லை. இதனால், முதலீட்டாளர்களின் ஒரே பாதுகாப்பான உலோகமாக தங்கம், அவர்களது கண்களில் ஜொலிக்கிறது. தங்கத்தில் முதலீடு கண்டபடி அதிகரிப்பதால், உலகம் முழுதும் அதன் விலை தாறுமாறாக உயர்கிறது.

காகித தங்கமும் ஜாக்பாட்!

தங்கத்தை உலோகமாக மட்டுமல்ல; ஆவண பத்திர வடிவில் வாங்கியவர்களுக்கும் இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வந்த சவரன் கோல்டு பாண்டுகளில் 2016 - 17 நிதியாண்டில் வெளியான பத்திரங்கள் முதிர்வடைகின்றன. அப்போது வாங்கிய விலை, 1 கிராம் 2,943 ரூபாய். இப்போது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள நிலை 8,624 ரூபாய். இது மும்மடங்கு லாபம்; 193 சதவீதம் லாபம். இவற்றை திரும்பப் பெற இன்று கடைசி நாள்.

தங்கத்தில் முதலீடு சரியா?

 இப்போதைக்கு பாதுகாப்பான ஒரே முதலீடு தங்கம் தான் என்கின்றனர், பண்டக சந்தை ஆய்வாளர்கள். அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படும் என்பதால், அதன் விலை உயர்வு நீடிக்கும் - ஆய்வாளர்கள் இதற்கு முன் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளின்போதும் தங்கத்தில் முதலீடு அதிகரித்தது - நிபுணர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை