உணவு தொழில் ஏற்றுமதிக்கு பயிலரங்கம்
சென்னை, தமிழகத்தில், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு உதவ, தமிழக அரசின் தொழில் வணிக ஆணையரகம், தென் மாநில வர்த்தக, தொழில் சபை உடன் இணைந்து, ஈரோடு 'டர்மரிக்' ேஹாட்டலில் நாளை காலை, 9:00 மணிக்கு பயிலரங்கம் நடத்துகிறது. இதில், தமிழக தொழில் துறை அதிகாரிகள், மத்திய அரசின், 'அபெடா' எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், தரச்சான்று வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பயிலரங்கில், எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன நாடுகளில் சந்தை வாய்ப்புகள் உள்ளன; ஏற்றுமதி செய்ய அரசு வழங்கும் ஊக்குவிப்பு சலுகைகள் என்ன; ஏற்றுமதி தரச்சான்று பெறுவது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.