சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பிடிக்கும் சொமாட்டோ
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில், 'ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்' நிறுவனத்துக்கு பதிலாக, உணவு வினியோக நிறுவனமான சொமாட்டோ நிறுவனம் இடம் பெற உள்ளது. இதே போன்று, 'பி.எஸ்.இ 100' குறியீட்டில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், சுஸ்லான் எனர்ஜி, அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், சம்வர்த்தனா மதர்சன் இண்டர்நேஷனல், பாலிசி பஜாரின் பி.பி.,பின் டெக் நிறுவனங்கள் சேர்க்கப்பட உள்ளன. அதற்கு பதிலாக, இந்த குறியீட்டில் இடம்பெற்றிருந்த அசோக் லேலேண்ட், பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க், ஐ.ஆர்.சி.டி.சி., யு.பி.எல், ஏ.பி.எல்., அப்பலோ டியூப்ஸ் நிறுவனங்கள் நீக்கப்பட உள்ளன.இது தவிர, 'பி.எஸ்.இ., சென்செக்ஸ் 50' குறியீட்டில், சொமாட்டோ, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டு, அதற்கு பதிலாக, இக்குறியீட்டில் இடம் பெற்றிருந்த எச்.டி.எப்.சி.,லைப் இன்சூரன்ஸ், பாரத் பெட்ரோலியம், எல்.டி.ஐ. மைண்ட்ரீ நிறுவனங்கள் நீக்கப்பட உள்ளன. மேற்கண்ட அனைத்து மாற்றங்களும், வரும் டிச., 23 முதல் அமலுக்கு வருகிறது.