வீட்டுக்கடன் : இ.எம்.ஐ.,க்கு மேல் பணம் கட்டுவது நல்லதா?
'கூகுள் பே-'-யில் என் நம்பருக்கு ரீசார்ஜ் செய்தபோது 'கூகுள் பிளே ஸ்டோர் வேலட்டில் செய்யுங்கள் பரிசு கிடைக்கும்' என்று வந்தது. அதை நம்பி 3,599 ரூபாய் பணத்தை செலுத்தினேன். பின்னர் தான் தெரிந்தது அதிலிருந்து ரீசார்ஜ் செய்ய முடியாது என்று. அந்த பணத்தை என் அக்கவுன்டுக்கு திரும்ப எடுக்கவும் முடியவில்லை. அதேநேரம் அதில் வெறும் கேம்ஸ்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதையும் அறிந்தேன். கூகுள் பே - கூகுள் பிளேவுக்கு இடையே 'L' மட்டுமே வித்தியாசம். ஆகவே, என்னால் சரியாக யூகிக்க முடியாமல் பணத்தை இழந்தேன். நான் நீதிமன்றம் சென்றால் இதில் வெற்றி கிடைக்குமா? ஆர்.கணேஷ், அன்னுார், கோவை இரண்டு பெயர்களும் லோகோக்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனம் உங்கள் அனுமதியின்றி பணத்தை எடுக்கவில்லை. நீங்களாகவே தவறாக புரிந்துகொண்டு விட்டீர்கள். அதனால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவது சிரமம். மேலும், இது கூகுளின் ஏமாற்று வேலையும் அல்ல. 'கூகுள் பிளே சப்போர்ட் கான்டாக்ட்' என்ற லிங்கில் சென்று, ஒரு புகாரை பதிவு செய்யுங்கள். 'மொபைல் ரீசார்ஜ் என்று நினைத்து தவறுதலாக பிளே ஸ்டோர் கோடு வாங்கிவிட்டேன்' என்று சொல்லி பாருங்கள். விதிவிலக்காக அவர்கள் உதவலாம். இன்னொரு வழி, இந்த கூகுள் பிளே பேலன்ஸை வைத்து, யூ டியூப் பிரீமியம், கூகுள் ஒன் ஸ்டோரேஜ், டிஸ்னி, ஹாட்ஸ்டார், சோனிலிவ் போன்ற ஓ.டி.டி.க்களுக்கு சந்தா செலுத்தலாம். நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தினால், அவர்களுக்கு உங்கள் கணக்கில் ரீசார்ஜ் செய்து தந்துவிட்டு, அவர்களிடம் பணம் வாங்கி கொள்ளுங்கள். ஸ்டேபிள் மணி என்ற செயலி, 8.50 சதவீத வட்டி தருவதாக விளம்பரம் வருகிறது. இது நம்பகமான முதலீடு தானா? ரமாமணி, சென்னை- - 91 ஸ்டேபிள் மணி என்பது ஒரு பிளாட்பார்ம். பல்வேறு வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், சிறு வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களை ஒன்றாக திரட்டி ஒரே வலைதளத்தில் கொடுக்கிறது. வாடிக்கையாளரான நீங்கள், ஒவ்வொரு வங்கியாக போய் வைப்பு நிதி திட்டங்களில் கணக்கு துவங்கி, பணம் போடுவதற்கு பதில், இங்கே ஒரே இடத்தில் எல்லா வங்கி வைப்பு நிதி திட்டங்களையும் ஒப்பீடு செய்து, எது தேவையோ அதில் முதலீடு செய்யலாம். இவர்கள், நீங்கள் முதலீடு செய்வதற்கான வசதியை தான் ஏற்படுத்தி தருகின்றனர். மற்றபடி, அந்த வைப்பு நிதிகள், அந்தந்த சிறு நிதி வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு தான் செல்கின்றன. அவர்களுடைய சான்றிதழ் தான் உங்களுக்கு வழங்கப்படும். இவர்கள், உங்களிடம் இருந்து கமிஷன் வசூலிப்பதில்லை. மாறாக, இத்தகைய சிறு நிதி வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்தே தமக்கான கட்டணத்தை வசூலித்துக் கொள் கின்றனர். அந்த நிதி நிறுவனங்களால், ஏராளமான கிளைகளை உருவாக்க முடியவில்லை, முதலீட்டாளர்களிடம் போய் சேர முடியவில்லை என்பதால், இத்தகைய தளங்களை பயன்படுத்திக்கொள்கின்றன. அதனால், நீங்கள் பணம் போடுவது அந்த தளத்தில் அல்ல. அந்த தளம் வழியாக வங்கிகளில் தான். நான் எஸ்.பி.ஐ.,யில் 50 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியுள்ளேன். மாதம் 37,000 இ.எம்.ஐ. என்றாலும் நான் மாதம் 55,000 கட்டுகிறேன். ஆண்டுக்கு ஒரு இ.எம்.ஐ.யும் சேர்த்து கட்கிறேன். கூடுதலாக கட்டும் பணம் நேரடியாக அசலில் கழித்துக்கொள்ளப்படுமா என வங்கி மேலாளரிடம் கேட்டேன். மேலும், எனக்கு கடிதம் வாயிலாக உறுதிமொழி தருமாறு கேட்டேன். தர மறுக்கிறார். அவர் சில வருடங்களில் மாற்றலாகி போய் விடுவார். நான் தான் 30 வருடம் வங்கியுடன் தொடர்பில் இருக்க போகிறேன். அவர் அசலில் வரவு வைக்கப்படும் என்று தான் சொல்கிறார். பிறகு ஏன் உறுதிமொழி கடிதம் தர மறுக்கிறார்? பாபு சந்தானம், பழனி வங்கி மேலாளர் எழுத்துப்பூர்வமாக கடிதம் தர மறுப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, வட்டி விகிதங்கள் மாறுபடும் போது அல்லது நீங்கள் எப்போதாவது ஒரு மாதம் கூடுதல் பணம் கட்டாமல் போனால், அசலில் கழிக்கும் தொகை மாறும். ஒரு நிலையான உறுதிமொழி கடிதத்தை கொடுத்துவிட்டு பின்னர் கணக்கீடு மாறினால், அது வங்கிக்கு சட்ட ரீதியான சிக்கலை ஏற்படுத்தும். அதனால் தான் அவர்கள் பொதுவாக இதுபோன்ற கடிதங்களை தனிப்பட்ட நபர்களுக்கு தரமாட்டார்கள். இன்னொரு விஷயம், உங்களுக்கு உறுதிமொழி கடிதமே தேவை இல்லை. உங்களுடைய கடன் ஸ்டேட்மென்டை பார்த்தாலே எல்லா விபரமும் தெரிந்துவிடும். நீங்கள் செலுத்தவேண்டிய இ.எம்.ஐ. 37 ,000, கட்டுவதோ 55,000. அப்படியானால், ஒவ்வொரு மாதமும், உபரியாக கட்டும் 18,000 ரூபாய், அசலில் தான் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டப்படும் ஒரு கூடுதல் இ.எம்.ஐ.,யும். அசலில் தான் கழிக்கப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்புகளுக்கு உஜ்ஜீவன் சிறுநிதி வங்கி நம்பிக்கையானதா என்று தெரிவிக்கவும்? அசாந்தா மேரி, குன்னுார் பொதுவாகவே சிறுநிதி வங்கிகள் பற்றி ஓர் ஐயம் இருக்கிறது. அது தேவை இல்லாதது. அவையும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று, அதன் நேரடி கண்காணிப்பின் கீழ் தான் இயங்குகின்றன. பெரிய வங்கிகளில் உள்ள அதே ஆடிட்டிங்கும், கடுமையான நிதி விதிமுறைகளும் இங்கும் பொருந்தும். இவை, நிதி நிறுவனங்களோ, சீட்டு கம்பெனிகளோ அல்ல. மேலும், சிறுநிதி வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளில், அ சல் பிளஸ் வட்டி இரண்டுக்கும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வரை வைப்பு நிதி காப்பீடு இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், இவை சிறுநிதி வங்கிகளாக இருப்பதால், தங்கள் தொழிலை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில் கூடுதல் மூலதனம் தி ரட்ட, வாடிக்கையாளர்களுக்கு அரை முதல் ஒரு சதவீதம் வரை கூடு தல் வட்டி தருகின்றன. பெரிய வங்கிகளுக்கான அத்தனை பாதுகாப்புகளும் இதற்கும் பொருந்தும். உங்கள் முதலீட்டின் ஆபத்தை குறைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான வழியை பின்பற்றுங்கள். ஒரு வங்கியில் அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் முதலீடு செய்யுங்களேன். வீட்டுக்கடன்: இ.எம்.ஐ.,க்கு மேல் பணம் கட்டுவது நல்லதா?