பெரிய ஆண்டவர், சந்தன கருப்பு சுவாமிகளுக்கு பழ பூஜை
பெரிய ஆண்டவர், சந்தன கருப்பு சுவாமிகளுக்கு பழ பூஜைகுளித்தலை,:குளித்தலை அடுத்த, வரவனை பஞ்., வேப்பங்குடி கிராமத்தில் பெரியாண்டவர் மற்றும் சந்தன கருப்புசாமி கோவில் உள்ளது. இதேபோல், பண்ணப்பட்டி பஞ்., சுக்காம்பட்டி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 87 ஊர் அப்பாடியான் பங்காளிகள் மற்றும் பூசாரிகளுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வமான பெரியாண்டவர் மற்றும் சந்தன கருப்புசாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பழ பூஜை திருவிழா நடத்துவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பழ பூஜை திருவிழா, கடவூர் ஜமீன் மோகன்குமார் தலைமையில் நடந்தது. 87 ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் முன்னிலையில், பெரியாண்டவர் மற்றும் சந்தன கருப்புசாமி கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பங்காளிகள், உறவினர்கள் வழிபாடு செய்தனர். அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.