உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடத்தை தேர்வு செய்து கொடுத்தால்விளையாட்டு மைதானம் தயார்

இடத்தை தேர்வு செய்து கொடுத்தால்விளையாட்டு மைதானம் தயார்

'இடத்தை தேர்வு செய்து கொடுத்தால்விளையாட்டு மைதானம் தயார்'அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் பரிசளிப்பு விழா பள்ளப்பட்டியில் நடந்தது.இதில் பங்கேற்ற அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ பேசுகையில், '' துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பின், விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதிகளை ஒதுக்கி மேம்படுத்தி வருகிறார். பள்ளப்பட்டியில், விளையாட்டு மைதானம் அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அங்கு மைதானம் அமைத்து தர அமைச்சர் செந்தில் பாலாஜி, நானும் தயாராக உள்ளோம். குழந்தைகள் விளையாடுவதற்கும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும், விளையாட்டு அரங்கம் ஏற்பாடு செய்து தரப்படும்,'' என்றார்.பின்னர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை