உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிசோரம் புதிய கவர்னர் வைக்கம் புருஷோத்தமன்

மிசோரம் புதிய கவர்னர் வைக்கம் புருஷோத்தமன்

அய்ஸ்வால்: மிசோரம் மாநில புதிய கவர்னராக வைக்கம் புருஷோத்தமன் பதவியேற்றுக்கொண்டார். 83 வயதான புருஷோத்தமனுக்கு கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், மாநில முதல்வர் லால் தன்வாலா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மூத்த காங்கிரஸ் தலைவரான வைக்கம் புருஷோத்தமன் கேரளாவைச் சேர்ந்தவர். லோக்சபா உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை