உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் நரேந்திர மோடி

உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் நரேந்திர மோடி

ஆமதாபாத்: 3 நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறைவு செய்தார். குஜராத்தில் அமைதி நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை பலப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் முதல் மூன்று நாள் உண்ணாவிரதத்தை சத்பாவனா மிஷன் என்ற பெயரில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி துவக்கினார். முதல் நாள் உண்ணாவிரதத்தில் அத்வானி உள்ளிட்ட கட்சி மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 2ம் நாள் உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இன்று 3வது நாள் உண்ணாவிரதத்தில் வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தனது 3வது நாள் உண்ணாவிரதத்தை மோடி நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ