உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி ராஜினாமா விவகாரம்:கவர்னருடன் முதல்வர் ஆலோசனை

நீதிபதி ராஜினாமா விவகாரம்:கவர்னருடன் முதல்வர் ஆலோசனை

பெங்களூரு:லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல் ராஜினாமாவை, கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார். புதிய லோக் ஆயுக்தா நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து, கவர்னருடன், கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்தினார்.கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல், விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளை பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர், தன் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார்.இது குறித்து, கவர்னர் பரத்வாஜை, ராஜ்பவனில் நேற்று சந்தித்து பேசிய கவுடா, ''லோக் ஆயுக்தா நீதிபதி ராஜினாமா குறித்து, கவர்னர் பரத்வாஜை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். புதிய லோக் ஆயுக்தா நீதிபதி நியமிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை,'' என்றார்.இச்சந்திப்புக்கு பின், சிவராஜ் பாட்டீல் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, கவர்னர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி