மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
முசாபர் நகர்:'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி அமைத்தோ அல்லது இணைந்தோ போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட உள்ளோம்' என்று ஜன் கிராந்தி கட்சித் தலைவர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.உ.பி., மாநில முன்னாள் முதல்வரும், கிராந்தி கட்சித் தலைவருமான கல்யாண் சிங், தியோபந்த் அருகே நிருபர்களிடம் கூறுகையில், 'உ.பி., மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது. பா.ஜ., கட்சி மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்தோ அல்லது அந்த கட்சியில் இணைந்தோ போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட உள்ளோம். எங்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இரண்டாவது வேட்பாளர்களின் பட்டியல் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்' என்றார்.
3 hour(s) ago
4 hour(s) ago | 5
4 hour(s) ago | 1