உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் எப்படி தொழில் நடத்துவது? மெகாவாட் ரூ.50 லட்சம் கட்டணமாம்!

தமிழகத்தில் எப்படி தொழில் நடத்துவது? மெகாவாட் ரூ.50 லட்சம் கட்டணமாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு விற்கவும், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கின்றன.சில நிறுவனங்கள் தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் தொடரமைப்பு நிறுவன துணைமின் நிலையங்களில் வழங்குகின்றன. இந்த மின்சாரம், பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.இவ்வாறு அமைக்கப் படும் மின் நிலையத்திற்கு, தமிழக மின் வாரியத்திடம், 'லொக்கேஷன் கிளியரன்ஸ்' எனப்படும் இட அனுமதி பெற வேண்டும்.இதன்படி, தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய வழித்தடத்தில் இணைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், 'ரிசோர்ஸ் சார்ஜ்' என்ற பெயரில், 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது.இது, இட அனுமதி கேட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப் பட்டது.இதற்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சில நிறுவனங்கள், 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைத்து, மத்திய வழித்தடங்களில் இணைக்க அனுமதி கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.இதற்கும் தலா 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் கேட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை, 19ம் தேதி நடக்கிறது.இது குறித்து, முதலீட்டாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் நிலத்தின் விலை மிகவும் அதிகம். அப்படி இருந்தும் தனியாரிடம் நிலம் வாங்கி காற்றாலை அமைக்கப்படுகிறது. இட ஒப்புதல் தருவதை தவிர, மின் வாரியத்திற்கு வேறு எந்த பணியும் கிடையாது.'இதற்கு எதற்கு, மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இப்படி செய்தால் எப்படி தொழில் நடத்த முடியும்?' என்கின்றனர்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சில மாநிலங்களில் தான், காற்றாலை அமைக்க சாதகமான சூழல் உள்ளது.'தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய வழித்தடத்தில் இணைக்கும் பட்சத்தில், தமிழக மின் உற்பத்தி திறனில் சேராது; எனவே தான், பிற மாநிலத்திற்காக தமிழகத்தில் காற்றாலை அமைக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றார்.தமிழகத்தில் இதுவரை, 1,800 மெகா வாட் திறனில் உள்ள காற்றாலை மின் நிலையங்கள், மத்திய வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. 1 மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் என்பது, வாரியத்தின் முறையான கட்டணம் மட்டும் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Jawa
செப் 21, 2024 08:18

தமிழகத்தில் அமைக்கப்பட்டு மத்திய மின்சார தொகுப்பில் நேரடியாக இணைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தின் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தால் தமிழகத்திற்கு ஆர்பிஓ அனுமதிக்க படாததால் அதற்குரிய அபராத தொகையை மத்திய அரசு வருடத்திற்கு ஒரு முறை கேட்பதாலும் அதனை ஈடு கட்டுவதற்காக மேற்கண்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது


Jawa
செப் 21, 2024 08:12

தமிழகத்தில் அமைக்கப்பட்ட நேரடியாக மத்திய தொடர் அமைப்பில் இணைக்கப்படும் காற்றாலை அமைப்புகள் உற்பத்தி செய்யும் மின்சாரம் நேரடியாக வேறு மாநிலங்களுக்கு செல்வதால் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான ஆர் பி ஓ தமிழ்நாட்டுக்கு கிடைப்பதில்லை அதனால் கூடுதலான அபராத தொகை தமிழகத்திற்கு மத்திய அரசால் விதிக்கப்படுகிறது அதனை ஈடு கட்டவே மேற்கண்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது


karutthu
செப் 16, 2024 08:51

Mr.Rung What you are telling is 100 % correct


Sathyanarayanan Sathyasekaren
செப் 16, 2024 02:59

தமிழக தொழில் முனைவோருக்கு கிரீம் பண்ணுக்கு போடும் GST தான் பிரச்னை. இது போன்ற அநியாய கொள்ளை எல்லாம் பிரச்னை இல்லை.


வேங்கடசுப்பிரமணியன்
செப் 15, 2024 14:09

மக்கள் மற்றும் தொழிற்சாலை மின் பயனீட்டு கட்டணம் தலை சுற்றுகிறது இலவச மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாதனங்களால். ஏனைய மாநிலங்களில் சலுகை விலையில் நிலம் உற்பத்தி துறைக்கு பல்வேறு சலுகை என வரவேற்கின்றனர். ஆனால் தடுமாறும் த நா மிவா உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கே வாங்குவதாக தகவல்கள் உள்ள நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும் அல்லது இனி புதிதாக இங்கு வர பின்வாகுவர். புரிந்து உணர்ந்து பிரிவர்


M Ramachandran
செப் 15, 2024 12:45

நம் வாயால் நல்லா வடை சுடுவோமாம்


Ravi.S
செப் 15, 2024 10:33

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரி மேல் வரிவிதிப்பு மற்றும் இட அப்ரூவருக்கு அதிகபட்ச கட்டணம்


M Ramachandran
செப் 15, 2024 09:43

இந்த லட்சணத்தில் தோழில் துறையில் முதலீடு செய்யுங்கள் என்று அயல் நாட்டு முதலீட்டர்களை கவர போகிரங்களாம். கேப்பையில் நெய் ஒழுகுது எனறால் கேஆர்ப்பான் கேணயன் இந்த கம்மிஷின் வேறு கொடுத்துட்டு தலையில் துண்டைய்ய் போட்டுகிட்டு போகா யார் முன் வருவார்கள்.????????


Rpalnivelu
செப் 15, 2024 09:30

திருட்டு குடும்ப கலகம் தன் சொத்துக்களை இப்படித்தான் கொள்ளையடித்து குவிக்கும்.


பாமரன்
செப் 15, 2024 09:12

இந்த செய்தியின் நோக்கமே தள பகோடாஸை குஷி படுத்த அப்பிடின்னு தெரியுது... எவனோ போட்டு மெயின்டெய்ன் பண்ற நான்கு வழி சாலைக்கு ஒவ்வொரு தபா போகும்போது மற்றும் வருஷா வருஷம் ஏற்றி பொதுமக்களிடம் கணக்கு வழக்கில்லாம டோல் கொள்ளையடிக்கவிட்டு அதில் மத்திய அரசு பங்கு வாங்குவதை ஞாயப்படுத்துங்க... ஆனால் பசுமை மின் உற்பத்திக்கு ஒரு தனி நிறுவனமாக...அதுவும் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி... அந்த நிறுவனம் செயல் பட ஒரு முறை அதாவது ஒன் டைம் சார்ஜ் வசூலிச்சா தப்புன்னு சொல்லும் இந்த அப்ரசண்டிக... இதுக கிட்ட மல்லு கட்றது வேஸ்ட்...


sridhar
செப் 15, 2024 13:42

. Dboot , boot மாடல்களில் தனியார் நான்கு வழி சாலைகள் கட்டி குறிப்பிட்ட காலம் வரை டோல் வசூல் செய்கிறார்கள் . இது UPA காலத்தில் இருந்து இருக்கும் வழிமுறை தான்.


புதிய வீடியோ