உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று புருனே, சிங்கப்பூர் செல்கிறார் மோடி

இன்று புருனே, சிங்கப்பூர் செல்கிறார் மோடி

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இந்தியா -புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று (செப்.03,) பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக புருனே புறப்பட்டு செல்கிறார். அங்கு புருனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார்.பின்னர் செப். 04, 05ம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். இந்தியா -சிங்கப்பூர் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்தியா -சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. இதில் மோடி பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
செப் 03, 2024 07:21

சிங்கப்பூர் சென்றால் மோடி அவர்கள் துறை முருகனை சந்திப்பாரா போட்டிக்கு அமெரிக்க சென்றிருக்கும் தமிழக முதல்வருக்கும் மோடிக்குந் என்னய்யா வித்தியாசம் மோடி அவர்கள் நாட்டிற்கு மூலதனம் தேடி செல்கிறார் மற்றொருவர் வீட்டிற்கு மூலதனம் தேடி செல்கிறார் அணுகுமுறைதான் வெவ்வேறு


Kasimani Baskaran
செப் 03, 2024 05:55

வெல்கம் தலைவா.


முக்கிய வீடியோ