உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ., தோல்விக்கு காரணம்?: அகிலேஷ் விளக்கம்

அயோத்தி கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் பா.ஜ., தோல்விக்கு காரணம்?: அகிலேஷ் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பா.ஜ.,வினர் பறித்தார்கள். இதனால் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதி மக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்துள்ளார்கள்' என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.உ.பி.,யில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.,வுக்கு பலமான ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rtgtreab&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தரபிரதேசத்தில் பா.ஜ., இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டளித்த அயோத்தி மக்களுக்கு நன்றி. அயோத்தியில் ஏழைகளின் நிலத்தை பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக பா.ஜ.,வினர் பறித்தார்கள். அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

அநீதி

ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. சந்தை விலைக்கு இணையாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள். இதனால் தான் அயோத்தி மற்றும் பல தொகுதிகளில் உள்ள மக்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர் என நினைக்கிறேன். பா.ஜ., வினர் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இடங்களை வெல்ல முடியாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

மகிழ்ச்சி

உத்தரபிரதேசத்தில் பல தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை மக்கள் வேண்டுமென்றே தோற்கடித்தனர். நாங்கள் மக்களுக்காக வேலை செய்தோம். இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படாது. மக்கள் பிரச்னைக்காகத் தான் தேர்தல் நடத்தப்பட்டது. பெரும்பான்மை இல்லை என்றால், ஆட்சி அமைக்க பலரை மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Alagusundram KULASEKARAN
ஜூன் 09, 2024 16:06

அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ராமர் கோயில் பகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களுக்கு சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ராகுல் காந்தி சோனியா காந்தி பிரியங்கா குடும்ப ஒரு லட்சம் ரூபாய் தருவதாக டோக்கன் கொடுத்து இருப்பது வீடியோ காட்சிகள் மூலம் வாக்காளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது மோடி முறையாக விசாரணை நடத்த தேர்வாணையத்திற்கும் தமிழ் நாடு தேர்தலில் வாக்கு சதவீதம் முரண்பாடு பெருமளவு வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக விசாரணை கமிஷன் பஞ்சாப் காவல் அதிகாரி வன்முறை அவருக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் தொழில் அதிபர்கள் விவசாயிகளின் போர்வையில் உள்ள காலீஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்


MARUTHU PANDIAR
ஜூன் 06, 2024 22:13

புதிய கூட்டணி அரசு எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியாத படிக்கு இந்த அந்நிய சக்திகள் ,கூட்டணி கட்சியினர் மூலமாகவே நெருக்கடி கொடுக்க முடிவெடுத்திருக்காங்கன்னு பேசிக்கறாங்க


MARUTHU PANDIAR
ஜூன் 06, 2024 22:11

இறுதி முடிவுகள் அதிகார பூர்வமாய் வெளிவரும் முன்னரே பா.ஜ மொத்தம் 240 இடங்கள் தான் என்று முன் கூட்டியே பலர் எப்படி தொலைக்க காட்சியில் சொல்ல முடிந்தது ? இதிலிருந்தே தெரிய வில்லையா/ மத்திய அமைச்சரவை மைதாவுடன் அரசு இதை விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர முற்பட்டால் கூட்டணியில் இருக்கறவங்களே வேண்டாமென்று மிரட்டுவார்களாம் +++அந்த அளவுக்கு இந்திய பொது தேர்தல் விஷயத்தில் அந்நிய சக்தி பூந்து விளையாடியிருக்குன்னு பேசிடிக்கறாங்க.++அவுங்களு மோடி மட்டும் மீண்டும் வந்து விடக் கூடாதாம் +++


T.Gajendran
ஜூன் 06, 2024 18:21

அப்போ? உளத்வுதுறை, மற்றும், INA,கோட்டைவிட்டதா?? வெளி நாட்டு சத்திகள், இயக்கங்கள், இங்கே, எப்படி செயல்படும்,


Balasubramanian
ஜூன் 06, 2024 18:13

நிலம் கையகப்படுத்தும் போது இருந்த விலை கோவில் கட்டி முடித்த பிறகு பன் மடங்கு உயர்ந்து இருக்கும் அதனால் நிலம் விற்றவர்கள் ஏமாற்ற பட்டதாக கூற முடியாது


RAJ
ஜூன் 06, 2024 18:03

சரிப்பா.. ஜெய்ச்சுபுட்ட அயோத்தில.. அடுத்தது என்ன செய்யப்போற... அவிங்க ஏன் அங்க போச்சுன்னு கவலைப்படட்டும்ம். ... ஜெயிச்ச நீ என்னப்பா பண்ண போற?


K.Muthuraj
ஜூன் 06, 2024 17:40

இவர் அந்த ஊரு கட்டுமரத்தின் புதல்வன்.


ஆரூர் ரங்
ஜூன் 06, 2024 17:18

தெருவை ஆக்கிரமித்து வீடுகளின் முன் பகுதிகளில் கடைகள் நிறுவனங்களை அமைத்திருந்தனர். அவை அகற்றப்பட்டன..பட்டா இல்லாததால் இழப்பீடு தர முடியாது. இது ஒரு காரணமே அல்ல.


T.Gajendran
ஜூன் 06, 2024 15:44

ஆன்மீகத்தையும், அரசியலையும், ஒன்றாக, நினைத்தால், சில நேரங்களில், முடிவுகள் இப்படித்தான், இருக்கும்,


Anand
ஜூன் 06, 2024 15:35

பொய் பிரச்சாரம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்டதின் பலனாக எதற்கும் பலனளிக்காத வகையில் ஜெயித்துவிட்டோம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ