உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பேர் இறப்பு : போலீஸ் உடல் தகுதி தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவு

11 பேர் இறப்பு : போலீஸ் உடல் தகுதி தேர்வை நிறுத்தி வைக்க உத்தரவு

ராஞ்சி: ஜார்க்கண்டில் போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் எதிரொலியாக தேர்வை நிறுத்தி வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் 583 போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு மாநிலம் முழுதும் 7 இடங்களில் கடந்த ஆக.22-ல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 772 பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கு நேற்று (செப்.,02) நடைபெற்ற உடல் தகுதி தேர்வின் போது 10 கி.மீ ஓட்டம் வைக்கப்பட்டது. கடும் வெயிலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சிலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர்.இதற்கு பல்வேறு காரணங்கள் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று நாட்கள் தேர்வை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்கள் குறித்த காரணத்தை அறிக்கையாக அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkateswaran Rajaram
செப் 03, 2024 09:46

ஆள்பவர்கள் தன பெரும்பாலும் திருடர்களாக இருக்கிறார்கள் அவர்களை பிடிக்க அவர்களே ஆள்களை தேர்வு செய்கிறார்கள் அதிலும் ஊழல் செய்து தங்களுக்கு வேண்டிய திருடர்களை மட்டும் தேர்வு செய்துகொள்வார்கள் ....இவனும் ஆறு மாதம் கம்பி எண்ணிவிட்டு வந்து இப்பொழுது cm சீட்டில் ...என்ன கொடுமை


Sampath Kumar
செப் 03, 2024 09:09

இந்த பிஜேபி சில விதி முகாரிகள் ஏதுவும் முறயாக பின் பற்றுவது இல்லை ஜார்கண்ட் மட்டுமே உத்தரகண்ட், பஞ்சாப் , பீஹார் போன்ற பிஜேபி ஆளும் மாநிலத்திலும் இதே நிலைமை தன ங்கே ஓன்று இரண்டு சம்பவம் அதுனால செய்தி இல்லை


muthu
செப் 03, 2024 07:09

In british period thief used to run and police too run to catch him . Nowadays thief using different techniques and police too learn with respect to modern era


Kasimani Baskaran
செப் 03, 2024 05:34

இராணுவத்துக்கு ஆள் எடுப்பதை விட கடினமான தேர்வு முறை சற்று வித்தியாசமானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை