உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,178 அடி மேலே காஷ்மீரில் உயரமான ரயில் பாலம்: மோடி திறப்பு

1,178 அடி மேலே காஷ்மீரில் உயரமான ரயில் பாலம்: மோடி திறப்பு

உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். செனாப் நதியின் மீது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் வகையிலான இந்த பாலம், காஷ்மீர் முதல் -கன்னியாகுமரி வரை ஒரே தேசம் என்ற கோஷத்துக்கு உயிரூட்டுகிறது. ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் பாதை வழியாக இணைக்கும் நடவடிக்கைகளை, பல ஆண்டுகளாகவே மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் உட்புறங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் ரயில் இணைப்பு ஏற்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது. மலைகள், ஆறுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் ரயில் சேவைக்கு தடையாக இருந்தன. காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதி ஓடுகிறது. இதன் மீது ரயில் பாலம் அமைத்தால் மட்டுமே, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு இணைப்பு ஏற்படுத்த முடியும். செனாப் ஆற்று படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்தில் பாலம் அமைக்க வேண்டியிருக்கும் என பொறியியல் நிபுணர்கள் கணக்கிட்டனர். உலகில் வேறு எங்குமே அவ்வளவு உயரத்தில் ரயில் பாலம் கட்டவில்லை. எனினும், நம்மால் நிச்சயமாக முடியும் என பொறியாளர்கள் உறுதி அளித்தனர். எனவே, உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, செனாப் நதி மீது பாலம் அமைக்க வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நிலநடுக்கம், பனிப்பொழிவு, உறைபனி உட்பட பல்வேறு இயற்கை அபாயங்கள் நேரக்கூடிய மலைப்பகுதி என்பதால், அனைத்தையும் சமாளித்து நிற்கும் வகையில் துல்லியமான பொறியியல் தொழில்நுட்பத்துடன் திட்டம் தயாரிக்க வேண்டியிருந்தது. கடந்த 2002ல் பாலம் கட்டுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், பணி 2017ல் தான் துவங்கியது. பாலம் கட்டுவதற்கான இடத்தை அடையவே 26 கி.மீ.,, நீளத்துக்கு தற்காலிக சாலைகள் அமைக்க நேரிட்டது. மலையை குடைந்து, 1,312 அடி நீள சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டது. அவற்றின் வழியாகவே அனைத்து கட்டுமான பொருட்களும் எடுத்து செல்லப்பட்டன. காற்று, மழை, புயல் என பல்வேறு சவால்களுக்கு நடுவே இரவு, பகலாக நூற்றுக்கணக்கான பொறியாளர்களும், தொழிலாளர்களும் எட்டு ஆண்டுகள் வேலை செய்து, பாலக்கனவை நனவாக்கினர். பாலத்துக்கு மட்டும் 1,486 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதிவேக ரயிலான வந்தே பாரத் சோதனை ஓட்டமும் ஜனவரியில் நடத்தப்பட்டது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதையடுத்து, கத்ரா மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் புதிய ரயில் பாதையில், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூவர்ணக்கொடியை ஏந்தியவாறு பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்றார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பம்சங்கள்

மொத்தம் 4,314 அடி நீளமுள்ள இந்த பாலம், முழுக்க முழுக்க எக்குவால் கட்டப்பட்டுள்ளது. 1.31 கி.மீ., நீளமுள்ள இந்த பாலம் முழுதும் கட்டமைக்க, 30,000 மெட்ரிக் டன் எக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை விட, செனாப் ரயில் பாலம் 115 அடி உயர்ந்தது. 'ஆர்ச்' வடிவ ரயில்பாதை பாலமான இது, மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்துக்கு அடிபோட்ட ஒமர்

நிகழ்ச்சியில் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசியதாவது:ஜம்மு -- காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ரயில்வே திட்டங்களிலும் பிரதமருடன் நானும் இருந்து வருகிறேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். 2014ல் கத்ரா ரயில் நிலையம் திறக்கப்பட்டபோது, இந்த மேடையில் இப்போது அமர்ந்திருக்கும் நான்கு பேர் அன்றும் இருந்தனர். அப்போது ரயில்வே இணை அமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா, இன்று இந்த மாநிலத்தின் கவர்னராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அன்று மாநில முதல்வராக இருந்த நான், தற்போது ஒரு யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால், இதை சரி செய்ய அதிக நேரம் தேவைப்படாது என நம்புகிறேன். பிரதமர் மோடி வாயிலாக, ஜம்மு - காஷ்மீர் மீண்டும் ஒரு மாநிலமாக அதன் பெருமையை மீண்டும் பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 07, 2025 21:26

2008 இல் இதை தொடங்கி வைத்தவர் மன்மோகன் அவர்கள் , ஒரு பயமே மோடி தொடங்கிய சிவன் கோயில் ஒரே மழைக்கு சுக்கு நூறாக உடைந்தது இவர் ராசி அப்படி


Barakat Ali
ஜூன் 07, 2025 18:07

திட்டங்களைத் தொடங்கி வைக்க 16 மணிநேரம் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லும் ஒருவர் பொன்னான தனது நேரத்தை வீணாக்குகிறாரே ???? இதைத் துறை அதிகாரி கூடச் செய்யலாம் .... அவர் மட்டுமல்ல .... இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே இப்படித்தான் ..... மக்கள்தான் நினைத்துப் பார்க்க வேண்டும் .....


vijai hindu
ஜூன் 07, 2025 20:44

உங்க எஜமான் உடைந்து போன பாலத்தையும் பொதுக்கழுப்பிறையும் திறந்து வைக்கும் போது ஏன் பிரதமர் உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைப்பது என்ன தவறு


SUBBU,MADURAI
ஜூன் 07, 2025 20:44

This is Chenab rail bridge in J


Vivek
ஜூன் 07, 2025 21:20

உங்கள் கருத்தை யாரும் பார்க்காவிட்டாலும்...அதற்கென்று நேரத்தை செலவிடுவதை விடவா,??


krishna
ஜூன் 07, 2025 21:39

VERI PIDITHA DESA VIRODHA MIRUGA MOORGANUKKU EPPODHUM MODI BJP VERI BAYAM.BURNOL VAANGI THADAVU.UN THALA THUNDU SEATTU TOILET KOODA THIRANDHU VAITHU KATTUMARAM PEYARAI VAIKKUM KEVALAM UNAKKU THERIYAADHA.


அப்பாவி
ஜூன் 07, 2025 15:37

இதனால் கோடிக்கணக்ஜான விவசாயிகள் பயன் பெறுவார்கள்


N Sasikumar Yadhav
ஜூன் 07, 2025 16:15

உங்க கோபாலபுர எஜமானின் சாராயக்கடையால் விவசாயிகள் அடைந்த பயன் மிக மிக அதிகம்


sirappalli suresh
ஜூன் 07, 2025 12:13

this bridge started at 1997 . so this BJP government not started this project


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 13:02

2004 முதல் பத்தாண்டு களாக ஆண்ட காங்கிரஸ் திமுக ஆட்சியில் ஏன் முடிக்கவில்லை? லட்சம் கோடி ஊழல்களுக்கு மட்டுமே நேரமிருந்தது.


vivek
ஜூன் 07, 2025 13:02

wrong....dont bluff 1997 they did only constructing feasibility...bjp govt aided funds...


RAAJ68
ஜூன் 07, 2025 11:35

உலகிலேயே உயரமான பாலம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் நாட்டின் விலைவாசியும் மிகவும் உயரத்தில் உள்ளன அது உங்களுக்கு தெரியாது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. 113 ரூபாய்க்கு கிடைத்த கோல்டு வின்னர் இப்போது 147 ரூபாய் சில கடைகளில் 150 155 என்று இஷ்டம்போல் இருக்கிறது. நல்லெண்ணெய் 450 ரூபாய் . பச்சரிசி 70 ரூபாய். பருப்பு வகைகள் வியாபாரிகளின் சவுகரியத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி உள்ளீர்கள். சாமானியனின் பாடு மிகவும் திண்டாட்டம். மருத்துவர்கள் தங்கள் இஷ்டம்போல் காசு வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறைக்கும் 500 ரூபாய் வாங்குகிறார்கள் சிலர் 700 ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று அவர்களுடைய திறமைக்கு ஏற்றுவாறு கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள்அவர்கள். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருவதற்கு ஒரு நாள் ஆகும். டோக்கன் வாங்குவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ப்ரைமரி ஹெல்த் சென்டர் என்று ஒன்று உள்ளது ஆங்காங்கே ஆனால் அங்கே சென்றால் மருத்துவர் இருக்க மாட்டார்.. சாதாரண காய்ச்சல் தலைவலி இவற்றுக்கு மட்டுமே அவர்கள் மருந்து கொடுப்பார்கள். சாதாரண மனிதனுக்கு அவதிப்படாமல் அலையாமல் எளிதாகச் சிறந்த மருத்துவ வசதி கிடைப்பதில்லை. ஆனால் 65 ஆயிரம் கோடிகள் செலவழித்து சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் சாமானியனுக்கு என்ன பயன். பெரு மழை பெய்தால் சென்னையில் வெள்ளம் ஆனால் பூமிக்கு அடியில் பல ஆயிரம் கோடிகளில் மெட்ரோ ரயில் தேவையா. செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் தினமும் ஒரு அல்லாட்டம். பூமிக்கு அடியில் போடப்படும் பல ஆயிரம் கோடிகளை செங்கல்பட்டு வரை மேல்மட்ட சாலை அமைத்து இருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும் ஆனால் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசுகளுக்கு இது பற்றி கவலையே கிடையாது.


Siva Balan
ஜூன் 07, 2025 14:34

தமிழகத்தில் ஏழைகளே இல்லைன்னு சொல்றானுங்க இங்குள்ள ஆட்சியாளர்கள். நீ இந்த புலம்பு புலம்புற.


sri
ஜூன் 07, 2025 14:35

hello Raja, what was your salary 20 years ago, getting the same, don't talk


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 11:28

சிறப்பான உட்கட்டமைப்புக்கள் மூலம் நாட்டுக்கு சுபிட்சத்தை கொண்டுவர முயலும் மோடியின் குழுவுக்கு பாராட்டுகள்.


ramesh
ஜூன் 07, 2025 11:10

இந்த பாலத்தை வடிவமைத்து கட்டி கொடுத்த பொறியாளர்களும் மற்றும் உடன் உழைத்த தொழிலாளர்களும் மிகவும் பாராட்ட படவேண்டியவர்கள் . இந்திய மக்களின் திறமையை உலகம் முழுவதும் பறைசாற்றி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .


vivek
ஜூன் 07, 2025 11:47

டாஸ்மாக் பாட்டிலுக்கு மேல பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் ரமேஷு சொன்ன சரியாதான் இருக்கும்....நம்புங்கப்பா.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 07, 2025 07:59

அடடா ..அடடா ..கால்வாயை வெட்டி தூர் வாரினதாக பொய் கணக்கெழுதி ஆட்டையை போட்டோமே ,,,சமுத்திரம் தூர்வார செலவுகாட்டி ஆட்டை போட்டோமே ..பூச்சிமருந்து தெளிப்பதில் கூட ஊழல் பன்னிசாதனை செய்தோமே ..தெரு கூட்டும் துப்புரவு தொழிலார்கள் வயிற்றில் அடித்து மஸ்டர் ரோல் பன்னி காசு அடிச்சோமே .. இந்த பாலம் மாட்டும் இங்கு கட்டப்பட்டிருந்தால் ... உபிகல் முடுக்கி விடப்பட்டு போர்க்கால அடிப்படையில் ஆட்டை போட்டிருப்போமே ...அதே எனக்கில்லை சொக்கா அது எனக்கில்லை ...


Palanisamy Sekar
ஜூன் 07, 2025 07:33

இப்படி ஒரு சாதனையை மோடிஜியை தவிர வேறு எந்த கட்சியின் தலைவர்களால் இப்படி தேசநலன் பற்றி சிந்திக்க முடியும்? இந்தியாவின் வளர்ச்சியில் மோடிஜியின் பங்கு மகத்தானது மறக்க முடியாதது. இதனால் இந்தியாவில் மோடிஜியின் பெருமை விண்ணை தாண்டி சென்றுள்ளது. அதே சமயம் இங்கே இன்னோர் அரசியல்வாதியின் வயிற்றெரிச்சல் அகோரமாக எரிந்து புகையில் புலம்புகின்றது. இதுநாள்வரை காஷ்மீர் பற்றி சிந்திக்காத அந்த ஊழல் புகாரில் சிக்கியுள்ள அந்த அரசியல்வாதி...காஷ்மீர் மாநில அந்தஸ்து பற்றி தமிழகத்திலிருந்து கதறுகின்றார். இஸ்லாமிய மக்கள் நிறைந்த காஷ்மீரில் மோடியின் செல்வாக்கு உயர்வதை கண்டு தூக்கமில்லாமல் அறிக்கைவிடுகின்றார். நாடே போற்றுகின்றது. ஆனால் இவருக்கு எரிகின்றது. செனாப் பாலம் பற்றி வாய்திறக்க முடியவில்லை அந்த சாராய ஊழலில் சிக்கியவருக்கு. ஊழலில் தமிழகம் உச்சம் தொடுகின்றது. செனாப் பால சாதனையால் இந்தியாவின் பிரதமருக்கு செல்வாக்கு கூடுகின்றது. ஊழல்வாதிக்கு பொறுக்க முடியவில்லை.


VENKATASUBRAMANIAN
ஜூன் 07, 2025 07:13

வெட்கமே இல்லாமல் காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் உரிமை கொண்டாடுகிறார். 2013 வரை எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு இப்போது வாய் சவடால்.


c.k.sundar rao
ஜூன் 07, 2025 09:56

Scamgress party as taken copyrights from dmk to use STICKERS for projects taken up and completed by BJP at centre.


sirappalli suresh
ஜூன் 07, 2025 12:19

இந்த பாலம் 1997 தொடங்க பட்டது . இதை பிஜேபி அரசு தொடங்க வில்லை . எதையும் தெரியாமல் கருத்து சொல்ல கூடாது . நேற்று எல்லா நியூஸ் தொலைக்காட்சி ஒளி பரப்ப பட்டது


Rathna
ஜூன் 07, 2025 12:50

கடலிலே மணல் அள்ளி திரும்ப சற்று தள்ளி கொட்டும் திட்டம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொண்டு வந்த அரசை தவறாக பேசாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை