உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குங்குமம் வைக்க மறுத்த அசோக்

குங்குமம் வைக்க மறுத்த அசோக்

கலபுரகி: காங்கிரசாருக்கு குங்குமம் என்றால் பயம் என, விமர்சிக்கும் பா.ஜ.,வின் எதிர்க்கட்சி தலைவர் அசோக், தன் நெற்றியில் குங்குமம் வைக்க மறுத்தது, சர்ச்சைக்கு காரணமானது.கலபுரகி, சிஞ்சோலியின், சுலேபேட்டில் உள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக், நேற்று மதியம் வந்தார். அங்கிருந்த தலைவர்கள் இரண்டு மாலைகளுடன் வந்தனர். அவற்றை அசோக் கழுத்தில் போட்டு வரவேற்க முற்பட்ட போது, மறுத்த அவர் மாலைகளை வாங்கி, தன்னுடன் வந்திருந்த மூத்த தலைவர் விஸ்வநாத் பவாருக்கும், மற்றொரு தலைவருக்கும் அணிவித்து கவுரவித்தார்.இதே வேளையில், விஸ்வநாத் பவார் குங்குமத்தை அசோக்கின் நெற்றியில் வைக்க வந்தார். ஆனால் அவர் குங்குமம் வைக்க மறுத்தார். அதன்பின் சால்வை அணிவித்து கவுரவித்தார். அசோக் நெற்றியில் குங்குமம் மறுத்தது, சர்ச்சைக்கு காரணமானது.சமீபத்தில் இவர் தன்னை புகழ்ந்து கொள்ளும் அவசரத்தில், 'நான் உள்துறை அமைச்சராக இருந்த போது, பப்பில் தகராறு செய்த பஜ்ரங்க்தள் தொண்டர்கள் மீது, குண்டர் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தேன்' என கூறி, ஹிந்து அமைப்பினரின் கோபத்துக்கு ஆளானார். தனக்கு எதிர்ப்பு கிளம்பிய பின், விழித்துக்கொண்ட அவர் பஜ்ரங்க் தள் அமைப்பினரிடம் மன்னிப்பு கோரினார்.இப்போது தன் நெற்றியில், குங்குமம் வைக்க மறுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை