உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ., விசாரிக்கும் 7,000 வழக்குகள் நிலுவை

சி.பி.ஐ., விசாரிக்கும் 7,000 வழக்குகள் நிலுவை

புதுடில்லி: 'சி.பி.ஐ., விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன; இவற்றில், 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளன' என மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன், கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த டிச., 31ம் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ., விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில், 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.மொத்தமுள்ள வழக்குகளில் 2,100 வழக்குகள் 20 ஆண்டுகளாகவும், 2,188 வழக்குகள் 10 ஆண்டுகளாகவும், 875 வழக்குகள் ஐந்து ஆண்டுகளாவும் நிலுவையில் உள்ளன. 1,379 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.அதேபோல், 658 வழக்குகள் சி.பி.ஐ., விசாரணை அளவில் நிலுவையில் உள்ளன. இதில் 48 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், 74 வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், 75 வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும், 175 வழக்குகள் ஓராண்டுக்கு மேலாகவும் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், 286 வழக்குகள் விசாரணையில் உள்ளன.கடந்த ஆண்டில் மட்டும் 876 வழக்குகள் சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், நீதிமன்ற உத்தரவின் பேரில் 91 வழக்குகளும், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் புகாரின் அடிப்படையில், 84 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.கடந்த ஆண்டு மட்டும் 676 அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 552 வழக்குகள் சி.பி.ஐ., தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 873 வழக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுஉள்ளன.இதேபோல், கடந்த ஆண்டில் 636 வழக்குகளில் நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 411 வழக்குகளில் தண்டனைகள் வழங்கப்பட்டன; 140 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு காரணங்களால், 85 வழக்குகள் கைவிடப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 02, 2024 22:22

இந்தியாவின் வினோதமே இதுதான். வழக்குகள் பல முடிவுக்கு வராமல் நிலுவையில் இருக்கும். ஆனால், பல வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்பே அதில் சம்பந்தப்பட்டவர்கள் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள். இந்த அவலத்தை என்னவென்று சொல்வது. வெட்கம். வேதனை.


ஆரூர் ரங்
செப் 02, 2024 22:10

சிபிஐ IPS அதிகாரிகள் நேரடியாக நியமனம் இல்லை .மாநிலங்களில் அனுபவமுள்ள சிறந்த IPS அதிகாரிகளை குறிப்பாகக் கேட்டுப் பெறுகின்றனர். ஆனால் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பல சிபிஐ கேட்டாலும் அனுப்புவதில்லை. அதனால் பெருமளவில் அதிகாரிகள் பற்றாக்குறையால் CBI திணறுகிறது.


புதிய வீடியோ