உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கஞ்சா சாகுபடி செய்யலாம் : போதைக்கு அல்ல.. மருத்துவ காரணத்திற்கு- இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்

கஞ்சா சாகுபடி செய்யலாம் : போதைக்கு அல்ல.. மருத்துவ காரணத்திற்கு- இமாச்சல் சட்டசபையில் தீர்மானம்

சிம்லா: மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் இன்று இமாச்சல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சா பயிரிடுவது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருந்தது. இமாச்சல் பிரதேச அரசு மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சா சாகுபடியை போதைப்பொருள் அல்லாத பயன்பாட்டிற்காக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஜெகத்சிங் நெகி தலைமையில் கடந்த ஆண்டு குழுவை அமைத்தது.இக்குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி மருத்துவம் மற்றும் தொழில்துறை காரணங்களுக்காக மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் எனவும் , மாநில பொருளாதார மேம்படுத்திட வேண்டியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 07, 2024 10:30

இதுதான் எல்லா இடத்திலேயும் நடக்கப் போகுது.


Lion Drsekar
செப் 07, 2024 09:45

அரசாங்கத்தால் விற்கப்படும் சாராயம் ஒரு விதத்திலும் பயன் தராது உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும் அதே போல் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்டுகள், ஆனால் இந்த செடி கைகால் நடுக்கம், மனசோர்வு, புற்று நோய் , வலிநிவாரணி . போன்றவற்றிக்கு அருமருந்து. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு . பூமியில் இயற்க்கை கொடுத்திருக்கும் ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் உள்ளன. வாக்களிக்க மற்றும் திருமண வயது என்று ஒன்றை நிர்ணயித்துள்ளார்கள் ஆனால் இன்று நடப்பது ?? இதேபோல்தான் எல்லாமே, வந்தே மாதரம்


Sivagiri
செப் 06, 2024 23:22

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தளபதி குமாரா ? ,


Matt P
செப் 06, 2024 22:20

நம்ம அரசும் இப்படி ஒரு தீர்மானத்தை போட்டு கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பையும் வளத்தையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்


Ramesh Sargam
செப் 06, 2024 22:05

அட இந்த அறிவிப்பு நல்லா இருக்கே. நாமளும் இப்படியே செஞ்சிடுவோம் என்று திமுக எண்ணுகிறதாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை