உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களின் அட்டகாசம் 2026 க்குள் முடிவுக்கு வரும்: அமித்ஷா உறுதி

நக்சல்களின் அட்டகாசம் 2026 க்குள் முடிவுக்கு வரும்: அமித்ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர் : 2026-ம் ஆண்டிற்கு நக்சல்கள் அட்டகாசம் முடிவுக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.சத்தீஷ்கர் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நக்சல்கள் பாதிப்புஅதிகம் உள்ள இம்மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,நக்சல்கள் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் சவாலாக உள்ளார். ஜனநாயக நாட்டிற்கு நக்சல்கள் தாக்குதல்களால் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.சரணடையும் நக்சல்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 10-ம் ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களின் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. வரும் 2026-ம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்கள் அட்டகாசம் முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 25, 2024 06:51

நமது புலிகேசி மன்னரைப்போல அல்லாமல் நிச்சயம் அமித்து நடத்திக்காட்டுவார் ..... நக்ஸல்களுக்கு சீன நிதி வரும் வழி அடைக்கப்பட்டு விட்டது .... முன்பு போல் விரக்தி அடைந்த இளைஞர்களை நக்ஸல்களால் மூளைச்சலவை செய்ய முடியவில்லை .... தற்போதெல்லாம் ஒன்று சரணடைகிறார்கள் .... அல்லது பிடிபடுகிறார்கள் .... மிக அரிதாகவே அவர்களது சதிச்செயல் வெற்றிபெறுகிறது .... அவர்களது வாழிடங்களும் இயற்கையாகவே குறுகி விட்டன .....


venugopal s
ஆக 24, 2024 23:08

மத்திய உள்துறை அமைச்சர் பேசுவது போல் இல்லை, கிளி ஜோசியக்காரன் பேசுவது போல் உள்ளது!


N Sasikumar Yadhav
ஆக 25, 2024 09:34

ஊ....பிக்களுக்கு எப்போதுமே ஓசியும் இலவசம் மட்டுமே கண்ணுக்கு தெரியும்


subramanian
ஆக 24, 2024 21:52

பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினை வாதம் எங்கிருந்தாலும் உடனே ஒழிக்க பட வேண்டும்.


Ramesh Sargam
ஆக 24, 2024 21:52

நக்ஸல்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். அவர்கள் அட்டகாசம் ஒரு நிரந்தர முடிவுக்கு வரவேண்டும். நாட்டில் அமைதி நிலவவேண்டும்.


K.n. Dhasarathan
ஆக 24, 2024 21:49

அமைச்சர் பேச்சை நம்பலாமா ? தூத்துக்குடி வெள்ளத்திற்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதக்கடைசியில் நிவாரணம் கொடுப்பதாக சொன்னார், ஒரு ரூபாய் கூட கிடைக்கலை, உண்மையா இல்லையா ? அப்புறம் ஆறு மாதமாக போராடி 0.5 % ரொம்ப கஷ்டப்பட்டு கொடுத்தார், போராட்டம் இல்லையெனில் அதுவும் கிடைக்காது, பிறகு எப்படி நம்புவது ?


N Sasikumar Yadhav
ஆக 24, 2024 23:34

நீங்க சொன்ன நிவாரணம் கோபாலபுர கஜானாவுக்கு சென்றிருக்கும் நீங்க போயி விசாரிங்க


RAMAKRISHNAN NATESAN
ஆக 25, 2024 06:46

கொள்ளையடிக்க பணம் கொடுக்க மாட்டேன் ன்னு மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே பேசினார் ..... கவனிக்கலையா கோல்மால்புர எடுபிடிகளே ?


ஆரூர் ரங்
ஆக 25, 2024 11:19

மாநில அரசின் தவறுகளால் நடக்கும் விபத்துக்குக் மத்திய உதவி தவறானது. ஏரி கண்மாய்களை மத்திய அரசா அழிக்கச் சொன்னது? உ.பி க்களல்லவா ஆக்கிரமித்தது?