உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

புதுடில்லி: ஜூலை 08-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக கடந்த 24-ம் தேதி அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு ரஷ்யாவில் நடக்க உள்ளது. கடைசியாக 2021 ம் ஆண்டு டிச.26-ம் தேதி டில்லியில் நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார்.இந்நிலையில் ரஷ்ய உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது குறித்து நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி வரும் ஜூலை 08-ம் தேதி பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உறுதியாகியுள்ளது. இப்பயணத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து இரு தரப்பு பரபஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். . உக்ரைனுடனான போருக்கு பின் முதன்முறையாக மோடி ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

hari
ஜூன் 29, 2024 14:39

ஒரு ஓசி சேரை எடுத்துட்டு சம்பத்து ஓடுனாரு பாரு...... அப்புறம் ஆளையே காணோம்


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:24

உலகம் சுற்றும் வாலிபன் ஓயப்போவது இல்லை போல என்ன கூந்தலுக்கு இப்போ ரஷ்யா என்று எல்லாம் யாரும் கேள்வி கேக்க கூடாது கேட்டால் இருக்கு என்னமோ


vadivelu
ஜூன் 29, 2024 14:12

சொன்னாலும் புரியாது. மனம் எங்கும் வெறுப்பு புழங்குது, புழுங்குது. இப்படியே சென்ற வருடங்களை போல இப்பவும் ஓட்டுங்க.


hari
ஜூன் 29, 2024 14:29

பார்ரா..... கோவம் வருது......


Palanisamy Sekar
ஜூன் 29, 2024 03:41

என்றைக்குமே ரஷ்யா இந்தியாவின் உற்ற நட்பு நாடாகவே இருந்துவருகின்றது. அந்த சூழல் மென்மேலும் இறுக்கமாக தொடர்ந்து பிரிக்கவே முடியாத அளவுக்கு மோடிஜி ஆட்சியில் அந்த பந்தம் தொடர்கின்றது. இந்த சூழலில்தான் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவையும் கட்டுக்குள் வைக்க முடிகின்றது மோடிஜியின் ராஜதந்திரத்தால். இன்னும் நாடு முன்னேற்றம் காண ரஷ்யாவின் நட்பு நமக்கு நிச்சயம் தேவை. அதனை மோடிஜி தொடர்வார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை