உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -உறவினர் கழுத்தை நெரித்து கொன்று சாக்கடையில் வீசிய தம்பதி சிக்கினர்

-உறவினர் கழுத்தை நெரித்து கொன்று சாக்கடையில் வீசிய தம்பதி சிக்கினர்

குருகிராம்:புதுடில்லி அருகே, உறவினரைக் கொலை செய்து கழிவு நீர் கால்வாயில் வீசிய தம்பதியை போலீசார் கைதுச் செய்தனர்.பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பரிச்சன் ஷர்மா,27. இவரது உறவினர் பீஹாரின் சுபோல் மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்ச்தேவ் தாக்குர்.ஹரியானா மாநிலம் குருகிராம் மானேசரில் பஞ்ச்தேவ் தன் மனைவி இந்துவுடன் வசிக்கிறார்.இந்துவுக்கும் ராம் பரிச்சன் ஷர்மாவுக்கு இடையே தகாத உறவு இருந்தது. இதை அறிந்த தாக்குர் மனைவியைக் கண்டித்தார். இதையடுத்துக் ஷர்மாவை கொலை செய்ய தம்பதி திட்டமிட்டனர். பஞ்ச்தேவ் தாக்குரின் மற்றொரு உறவினர் சந்தன் தாக்குருடன் ஆலோசித்தனர்.கடந்த 14ம் தேதி ஷர்மாவுக்கு போன் செய்த இந்து வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஷர்மா வந்தவுடன் மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து ஷர்மாவை கொலை செய்தனர். பின், உடலை ஒரு தகர டிரம்மில் வைத்து கழிவுநீர் கால்வாயில் வீசினர்.கடந்த 3 நாட்களுக்கு முன், உடலைக் கண்டுபிடித்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்ச்தேவ் தாக்குர், அவரது மனைவி இந்து மற்றும் உறவினர் சந்தன் தாக்கூர் ஆகிய மூவவையும் மானேசர் போலீசார் விசாரித்தனர்.கொலை செய்ததை ஒப்புக் கொண்ட பஞ்ச்தேவ் தாக்குர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “ராம் பரிச்சன் ஷர்மா என் உறவினர். என் மனைவி இந்துவுடன் தகாத உறவில் இருந்தார். அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கு என் மனைவி மற்றும் மற்றொரு உறவினர் சந்தன் தாக்குர் ஆகியோரும் உதவினர். மூவரும் சேர்ந்து ஷர்மாவை வீட்டுக்கு வரவழைத்து மின் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை டிரம்மில் வைத்து கழிவு நீர் கால்வாயில் வீசினோம்,”என, கூறியுள்ளார்.மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ