3 மாடி கட்டடம் இடிந்து விபத்து ஒரே குடும்பத்தில் 10 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
மீரட்: உ.பி.,யின் மீரட் பகுதியில் உள்ள ஜாகீர் நகரில் மூன்று மாடி கட்டடம் இருந்தது. இதில் சிலர் வசித்து வந்தனர். இதன் கீழ் பகுதியில் கட்டட உரிமையாளர் பால்பண்ணை நடத்தி வந்தார். இந்த நிலையில், அந்த கட்டடம் நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது.இதில், அங்கு வசித்து வந்த 15 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இது பற்றி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் நான்கு பேர் குழந்தைகள்.மேலும், பால்பண்ணையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 24 மாடுகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது.