உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதம் 10,000 ரூபாய் தருகிறேன்! பவித்ராவிடம் ரேட் பேசிய ரேணுகாசாமி

மாதம் 10,000 ரூபாய் தருகிறேன்! பவித்ராவிடம் ரேட் பேசிய ரேணுகாசாமி

பெங்களூரு: “என்னுடன் ரகசிய உறவில் இருக்க, மாதம் 10,000 ரூபாய் தருகிறேன்,” என, பவித்ராவிடம், ரேணுகாசாமி ரேட் பேசியது பற்றி, போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவர் கொலை செய்தது தொடர்பாக, நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் மீது, நீதிமன்றத்தில் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.குற்றப்பத்திரிகையில் போலீசார் பதிவு செய்திருக்கும் விபரங்கள் பற்றி தினந்தோறும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நேற்று வெளியான தகவல்:தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பவித்ரா கவுடா குறுக்கே வருவது, ரேணுகாசாமிக்கு பிடிக்கவில்லை. பவித்ரா கவுடாவை தர்ஷனிடம் இருந்து பிரிக்க திட்டமிட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள், மெசேஜை அனுப்பி வந்துள்ளார்.பவித்ரா உடலை ஆபாசமாக வர்ணித்தும், மெசேஜ் அனுப்பி உள்ளார். இது பவித்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆபாச மெசேஜ்களை 'ஸ்கிரின் ஷாட்' எடுத்து, பவனிடம் கூறியுள்ளார்.

ஆபாச பேச்சு

கடந்த ஜூன் முதல் வாரத்தில், ரேணுகாசாமிக்கு 'ரீப்ளே' கொடுத்துள்ளார். ''என்னை பற்றி தவறாக பேச வேண்டாம். உன்னை எனக்கு பிடிக்கும்,'' என பவித்ரா பதில் கொடுத்தார்.நைசாக பேசி, ரேணுகாசாமியின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டார். தன் மொபைல் எண் என்று கூறி, பவன் மொபைல் எண்ணை கொடுத்தார்.பவித்ரா அனுப்புவதுபோல, 'வாட்ஸாப்'பில் பவன் மெசேஜ் செய்தார். இதை அறியாத ரேணுகாசாமி, வாட்ஸாப்பிலும் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதுடன், ''என்னுடன் ரகசிய உறவில் இருக்க, மாதம் உனக்கு 10,000 ரூபாய் தருகிறேன்,'' என, ரேட் பேசி உள்ளார்.

கடத்தல்

இதுபற்றி அறிந்த பவித்ரா மேலும் ஆத்திரமடைந்துள்ளார். அதன் பின் ரேணுகாசாமி பற்றிய தகவல்களை அவரிடம் இருந்தே பெற்றுள்ளனர்.'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்புவது பவித்ரா என்று நம்பிய ரேணுகாசாமி, தன்னைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளார். தன் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார்.பவித்ராவின் மொபைல் போனில் இருந்து ரேணுகாசாமி அனுப்பிய 20 ஆபாச மெசேஜ், 65 ஆபாச புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.ரசிகரை கடத்தி வந்து செருப்பால் அடித்தும், பவித்ரா வீட்டிற்குச் சென்றுவிட்டார். கொலை நடந்தபோது அங்கு அவர் இல்லை.மறுநாள் பவித்ராவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய தர்ஷன், “போலீஸ் வந்து உன்னிடம் ஏதாவது விசாரித்தால், எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடு,” என கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.இதைத் தொடர்ந்து பவித்ரா, பவனை தொடர்பு கொண்டபோது, ரேணுகாசாமி கொலையானது தெரிந்தது.மெலிந்த தேகம் உடைய ரேணுகாசாமி மார்பில், 110 கிலோ எடையில் இருந்த தர்ஷன், ஷூ காலால் ஓங்கி மிதித்துள்ளார். இதில் அவரது மார்பெலும்பு உடைந்துள்ளது.திரைப்படங்களில் வருவது போல், ரேணுகாசாமியை துாக்கி அங்கு நின்ற, லாரி மீது வீசி உள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.கடைசியாக பவித்ராவுக்கு அனுப்பிய, ஆபாச மெசேஜை காட்டி, மர்ம உறுப்பில் மிதித்து உள்ளார். இதனால் ரேணுகாசாமி இறந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கை கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMAKRISHNAN NATESAN
செப் 08, 2024 10:38

எந்த நடிகரோ, நடிகையோ யாருக்கும் ரசிகராக இருங்கள் ..... அதுவும் தியேட்டர் / டீவி ரூம் வரை மட்டுமே .... அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள் .... உங்கள் தலைவனை சினிமாவிலும் தேடாதீர்கள் ....


RAJ
செப் 07, 2024 23:11

மிருகம்.


RAMAKRISHNAN NATESAN
செப் 08, 2024 10:36

துவக்கிய ரேணுகாசாமி தானே ????


முக்கிய வீடியோ