உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 கர்நாடக அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு ரூ.45 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின

11 கர்நாடக அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு ரூ.45 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின

பெங்களூருகர்நாடகாவில் ஊழலில் ஈடுபட்டு வந்த 11 அதிகாரிகளுக்கு சொந்தமான 56 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 45 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு மாநகராட்சி கெங்கேரி மண்டல வருவாய் அதிகாரி பசவராஜ் மாகி; மாண்டியா கிராமப்புற குடிநீர், வடிகால் வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவராஜு உட்பட 11 அதிகாரிகள் மீது, பல்வேறு முறைகேடு புகார்கள் லோக் ஆயுக்தாவில் குவிந்தன.இதையடுத்து, ஒன்பது மாவட்டங்களில், இவர்கள் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என 56 இடங்களில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல், லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.பசவராஜ் மாகியின் கலபுரகி வீட்டில், 13.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சூதாட்ட கேசினோ நாணயங்கள் அடங்கிய சூட்கேஸ்; இரண்டு புலி நகங்கள் சிக்கின. தாவணகெரே செயற்பொறியாளர் உமேஷ் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து அதிகாரிகளின் வீடுகளிலும், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள் என, 45.14 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி