11 எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா மேலவை தலைவர் தகவல்
பெங்களூரு: ''கர்நாடக வரலாற்றில், முதன் முறையாக மேலவையின் 11 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்,'' என மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.கர்நாடக மேலவையின், ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பேகவுடா, நேற்று தன் ராஜினாமா கடிதத்தை, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் ஒப்படைத்தார்.ராஜினாமா கடிதத்தை பெற்ற பசவராஜ் ஹொரட்டி கூறியதாவது:மரிதிப்பேகவுடா இன்று (நேற்று) ராஜினாமா கடிதம் கொடுத்தார். நாளை (இன்று) மற்றொரு உறுப்பினர் ராஜினாமா செய்ய உள்ளார். அவர் ஹூப்பள்ளிக்கு வந்து, கடிதம் கொடுக்க வாய்ப்புள்ளது அல்லது இ - மெயில் மூலமாகவும் அனுப்பக்கூடும். யார், யார் ராஜினாமா செய்கின்றனர் என்பது, நாளை தெரியும். எனக்கு போன் செய்து கூறியுள்ளனர்.என் பதவி காலத்தில், 11 எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். 2018 அக்டோபர் 17ல் உக்ரப்பா, 2021 நவம்பர் 2ல் சீனிவாஸ் மானே, 2021 நவம்பர் 29ல் மனோஹர், 2022 மார்ச் 31ல் இப்ராஹிம், 2023 மார்ச் 6ல் புட்டண்ணா. அதன்பின், 2023 மார்ச் 20ல் பாபுராவ் சிஞ்சன்சூர், 2023 ஏப்ரல் 12ல் சங்கர், அதே மாதம் 14ல் லட்சுமண் சவதி, 19ம் தேதி ஆயனுார் மஞ்சுநாத், 2024 ஜனவரி 25ல் ஜெகதீஷ் ஷெட்டர், இன்று (நேற்று) மரிதிப்பேகவுடா ராஜினாமா செய்துள்ளனர்.கர்நாடக வரலாற்றில், மேலவையின் 11 உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது, இதுவே முதன் முறையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.மரி திப்பே கவுடாவுடன் சேர்த்து மேலவையில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.