உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 அம்ச செயல் திட்டம் என்.டி.எம்.சி., அறிவிப்பு

11 அம்ச செயல் திட்டம் என்.டி.எம்.சி., அறிவிப்பு

கன்னாட் பிளேஸ்:அடுத்த ஓராண்டுக்கான 11 அம்ச செயல் திட்டத்தை என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் தலைவர் நரேஷ் குமார் அறிவித்தார்.என்.டி.எம்.சி., வெளியிட்ட அறிக்கை:மத்திய டில்லியின் பாலிகா கேந்திராவில் உள்ள என்.டி.எம்.சி., தலைமையகத்தில் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி, தேசியக் கொடியை நேற்று முன்தினம் நரேஷ் குமார் ஏற்றினார்.துாய்மையான நகரம், பசுமை நகரம், இ-மொபைல் மூலம் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், கலாசார நகரம், உலகத் தரம் வாய்ந்த குடிமைக் கட்டமைப்பு, உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த சுகாதார உள்கட்டமைப்பு, முழுமையான சமூக நலன் உள்ளிட்ட 11 அம்ச செயல்திட்டத்தை என்.டி.எம்.சி., செயல்படுத்த உள்ளது.அடுத்த ஓராண்டுக்குள் இந்த 11 அம்ச இலக்கை எட்டுவதை நோக்கி என்.டி.எம்.சி.,யின் செயல்பாடு இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி