வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடைசியில் யார் வாங்குகிறார்கள் யார் விற்றார் என்று ஆப்பிள் தொழில் நுணுக்கத்தை வைத்து மொத்தமாக கூண்டோடு தூக்கலாம். புதிய ஐபோன்களை ரூட் செய்வது அவ்வளவு எளிதல்ல.
சாகர்: ரூ.11 கோடி மதிப்புள்ள 1,500 ஐபோன்கள் காணாமல் போன வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்க தவறிய 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சாகர் மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் தயாரிக்கப்பட்ட ஐ போன்கள் கடந்த ஆக.,15-ம தேதி கண்டெய்னர் லாரி மூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. லாரி ம.பி., மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் இருந்த போது கொள்ளையடிப்பு சம்பவம் துவங்கி உள்ளது.ரூ.11 கோடி மதிப்புள்ள 1,500 போன்கள் கொள்ளையடிக்கப்பட்டதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதே நேரத்தில் இந்த ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனம் இது வரையில் எங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றார்சாகர் மண்டல ஐ.ஜி., கூறுகையில் காணாமல் போன ஐ போன்கள் குறித்த வழக்கில் அலட்சியம் காட்டியதாக பண்டாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் , தலைமை காவலர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
கடைசியில் யார் வாங்குகிறார்கள் யார் விற்றார் என்று ஆப்பிள் தொழில் நுணுக்கத்தை வைத்து மொத்தமாக கூண்டோடு தூக்கலாம். புதிய ஐபோன்களை ரூட் செய்வது அவ்வளவு எளிதல்ல.