உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் கர்ப்பிணி பசு கொலை 46 நாட்களுக்கு பின் 2 பேர் கைது

கர்நாடகாவில் கர்ப்பிணி பசு கொலை 46 நாட்களுக்கு பின் 2 பேர் கைது

உத்தர கன்னடா,இறைச்சிக்காக, கர்ப்பிணி பசுவை கொன்று, வயிற்றில் இருந்த கன்றை வீசியவர்களில் இருவரை, 46 நாட்களுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் ஹொன்னாவரின் கொண்டகுளி கிராமத்தில், கர்ப்பிணி பசுவை கொன்று, வயிற்றில் இருந்த கன்றை வெளியே வீசிவிட்டு, இறைச்சி திருடிச் செல்லப்பட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.குற்றவாளிகளை கைது செய்ய, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில், பட்கலின் முஜாமின், வாசிம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக, மாவட்ட எஸ்.பி., நாராயணா நேற்று அளித்த பேட்டி:பசுவை கொன்றது தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அல்தாப் கடபுருசு, மதின் கடபுருசு, முகமது ஹசேன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், வாசிம், முஜாமின் குறித்து தகவல் தெரிவித்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் தார்வாடுக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு தப்பிச் சென்றனர்.மஹாராஷ்டிரா சென்ற போலீசார், வாசிமை கைது செய்தனர். பணம் இல்லாததால், மீண்டும் தன்னுார் வந்த முஜாமின் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர்கள், பட்கலில் நடந்த திருமண விழாவுக்காக, கொண்டுகுளி கிராமத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த கர்ப்பிணி பசுவை கொன்றுள்ளனர்.இதற்கான தொகையை, திருமண வீட்டாரிடம் இருந்து 'கூகுள் பே' மூலம் பெற்றனர். இது, போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிக்க சுலபமாக இருந்தது.கடந்த 46 நாட்கள் ஐந்து மாநிலங்களில் 11,000 கி.மீ., பயணம் செய்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். 130 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது; 800க்கும் மேற்பட்ட மொபைல் போன் எண்கள் சரிபார்க்கப்பட்டன.இவர்கள் பற்றிய ரகசிய தகவல் தெரிவித்த இருவருக்கு, தலா 50,000 ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
மார் 13, 2025 10:58

முகத்தை பார்த்தாலே தெரிகிறது சாதிக்க பிறந்தவர்கள் என்று . சாதித்துவிட்டார்கள்


கோமகன்- யாதவன்
மார் 13, 2025 09:23

அவங்களுக்கு நோக்கம் ஒண்ணே ஒண்ணுதான். காசு வேணும் அதுக்கு எந்த அளவுக்கும் இறங்கி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அந்த கர்ப்பிணி ஜீவனை கொன்று பணம் சேர்த்து உயிர் வாழ்கிறார்கள். இவர்களுக்கு பணம் என்று வந்தால் பசுவும் பெற்ற தாயும் ஒன்று தான். எல்லாம் வல்ல இறைவன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான்.


வாய்மையே வெல்லும்
மார் 13, 2025 05:49

ரொம்பவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. திருட்டுத்தனம் மொள்ளமாரி முடிச்சவுக்கு எல்லாமே உள்ளது தான் மூர்கஸ்வபாவம் என்பது நிரூபணம். இந்த செய்தியை படித்து ட்ராவிடிய ஷ்டாக்ஸ் வோட்டு பிச்சைக்காக கை முஷ்டியை தேவையில்லாமல் முருக்கவேணாம் என நல்லோர் நலம்விரும்பி சமூகம் கேட்டுக்கொள்கிறது ..


karupanasamy
மார் 13, 2025 05:06

இசுலாம் மனிதர்களுக்கானது அல்ல நாகரீகமற்ற கொடூர சிந்தனையாளர்களுக்கானது என்பதை உணர்ந்து இதுவரை வழிதவறிய முசுலீம்கள் இசுலாத்தை துறந்து மனிதநேயமிக்கவர்களாக மாறி குவிட் இசுலாம் இயக்கத்தை ஆதரியுங்கள்.


சமீபத்திய செய்தி