உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 30 பேர் பணி நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நாளில் காய்ச்சல் எனக் கூறி விடுமுறை எடுத்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றாக தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்துள்ளனர். விடுப்பு எடுத்த ஊழியர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து இருந்தனர். அவர்களைத் தொடர்புகொள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முயற்சி செய்தது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தினால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sridhar
மே 09, 2024 15:37

சபாஷ் நல்ல முடிவு


dinesh palanisamy
மே 09, 2024 13:18

அந்த பேரும் திறமை வாய்ந்த சீனியர்கள் அவர்ககலை வேலைய விட்டுபுதுசா ஆள் எடுக்கணும்னா இன்னும் அதிகமா சம்பளம் கொடுக்கணும் அதுக்கு பதிலா இவங்க கிட்டயா பேசி புரிய வைக்கணும் இல்லைனா அனுபவம் இல்லாத ஆட்களை எடுத்து அதிகமா விபத்துதான் நடக்கும்


Jai
மே 09, 2024 12:34

பொதுவாக பிளைட் பிசினஸ் மலிந்து கொண்டு தான் வருகிறது ஏற்கனவே ஜெட் அட்வைஸ் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அழிந்துவிட்டனர். பெரும் நஷ்டத்தில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை tata குழுமம் வாங்கி தற்போது தான் சீரமைத்து வருகின்றனர். இந்த சீர் அமைப்பு முடிவதற்கு சில வருடங்கள் ஆகும். அதன் பிறகு அவர்கள் நிச்சயமாக அவர்கள் ஊழியர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். அரசு ஊழியர்களாக இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் இடதுசாரி மன நிலைமையில் போராட்டம் நடத்தி சம்பள உயர்வு கேட்கலாம் என்று நினைக்கிறார்கள். முழுவதுமாக மூட இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நஷ்டங்களை குறைத்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ஊழியர்களுக்கு வருங்காலத்தில் நல்லது நடக்கும்.


Sankaranarayanan
மே 09, 2024 12:33

I want everyone to understand that, now a days, corporate companies squeeze their employees beyond their capacities The stress level of staffs are high and causing health issues to them If the employee demises, company just forget them and move on immediately Top management may be good, but the middle managers are ruthless But TATA is the only exception The


Tirunelveliகாரன்
மே 09, 2024 12:28

இவர்களால் எய்யும் அட்டூழியத்தால் ஊழியர்கள் அல்லது நிர்வாகம் பயணங்கள் தடைபட்டு போகிறது வேலை இழப்பு உட்பட எத்தனையோ இழப்புகள் ஏற்படுகிறது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


Saai Sundharamurthy AVK
மே 09, 2024 11:21

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த 300 பேரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு அனுபவம் வாய்ந்த புதியவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.


Shankar
மே 09, 2024 11:04

சூப்பர் படித்துவிட்டு வேலையில்லாமல் அலையும் இளைஞர்கள் நம்நாட்டில் ஏராளம் இவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம் கொடுத்தும் போதவில்லை நிர்வாகம் எடுத்த இந்த நல்ல முடிவை வரவேற்கிறேன்


saravan
மே 09, 2024 10:53

இது போன்ற நடவடிக்கைகள் தேவை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி