உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலை மஹாதேஸ்வரா மலையில் 300 லிட்டர் மதுபானம் பறிமுதல்

மலை மஹாதேஸ்வரா மலையில் 300 லிட்டர் மதுபானம் பறிமுதல்

சாம்ராஜ்நகர் : பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலையில், கலால் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 300 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.சாம்ராஜ்நகர், ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா மலை கோவில் பிரசித்தி பெற்றதாகும். மஹாதேஸ்வர சுவாமியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அடர்த்தியான, இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்பகுதி சூழ்ந்துள்ளது. எனவே சுற்றுலா பயணியரும் பெருமளவில் வருகின்றனர். மலை மஹாதேஸ்வரா மலையின், வனப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, கலால் துறைக்கு தகவல் வந்தது. இதனால், கலால் துறை அதிகாரிகள், மலை மஹாதேஸ்வரா மலையில் நேற்று காலையில், திடீர் சோதனை நடத்தினர். வனப்பகுதியில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்ட 300 லிட்டர் மதுபானத்தை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். மலையில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைத்த சித்தப்பா, 35, முத்துராஜ், 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. புராதான பிரசித்தி பெற்ற மலையில், மதுபானம் பதுக்கி வைத்து சுற்றுச்சூழலை பாழாக்கும் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை