உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமானியர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேட்டி

சாமானியர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எங்களுக்கு சிறிய வழக்கு என எதுவுமில்லை; அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம்; சாமானிய மக்களுக்காக நாங்கள் எப்போதும் இருக்கிறோம்'' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: வசதி படைத்தவர்கள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள், சாதி, மதம் அல்லது பாலினம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் உச்ச நீதிமன்றம் சாமானிய மக்களுக்காக எப்போதும் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எந்தவொரு வழக்கும் சிறிய வழக்கு கிடையாது. நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். சில சமயங்களில் நள்ளிரவில் எனக்கு இமெயில்கள் வரும். ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய பணியாளர்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான அமர்வை அமைத்தோம். யாரோ ஒருவரின் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம்... யாரோ ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கலாம்... யாராவது சரணடைய இருக்கும் நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்... இப்படி இதயத்தை நொறுக்கும் வகையிலான வழக்குகள் அனைத்திலும் நீதிமன்றங்கள் தீவிர கவனம் செலுத்துகின்றன.

எங்கள் நோக்கம்

மிகச் சிறிய வழக்கு என எதுவுமில்லை; அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம். சாமானியர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சாமானிய மனிதன் ஏதேனும் பிரச்னையை எதிர்கொண்டால், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை பலப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பையும் பலப்படுத்துகிறோம்.யாரோ ஒருவரின் பென்ஷன், தவறான எப்.ஐ.ஆர், பல வருடங்களாக சிறையில் இருக்கும் ஒருவரைப் போன்ற சிறிய பிரச்னைகள் கூட அதன் தீவிரத்தை உணர்ந்து கொண்டால், இந்த வழக்குகள் அனைத்தும் மிகத் தீவிரமாக மாறும். எனது சிறந்த தோழி என் மனைவி கல்பனா தான். அவரும் நானும் ஆயுர்வேத டயட்டை பின்பற்றுகிறோம். நாங்கள் சைவ உணவு உண்பவர்கள். எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Arachi
மார் 22, 2024 21:24

சமீபகாலத்தில் கண்டெடுக்கப்பட்ட அற்புதமான உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அய்யா மரியாதைக்குரிய சந்திர சூட் அவர்கள் நியாயமான நீதி கிடைக்கிறது இவரிடமிருந்துவாழ்த்துகிறோம்


Arachi
மார் 22, 2024 21:24

சமீபகாலத்தில் கண்டெடுக்கப்பட்ட அற்புதமான உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அய்யா மரியாதைக்குரிய சந்திர சூட் அவர்கள் நியாயமான நீதி கிடைக்கிறது இவரிடமிருந்துவாழ்த்துகிறோம்


Narayanan
மார் 22, 2024 16:00

Till ponmudis case , I was under impression you will deliver good judgement But vain to learn


Devan
மார் 21, 2024 22:36

இதுவரை எவ்வளவு பாக்கி இருந்த கேஸ்களை நீங்கள் தீர்த்து வைத்துள்ளீர்கள் நியாயம் என்பது கண்ணை மூடிக்கொண்டு கூட தெரியவேண்டும் தண்டனை பெற்றவருக்கு மந்திரி பதவி பிரமாணம் செய்து வைக்க நிர்பந்திக்கும் நீங்கள் எப்படி நியாயவானாக இருக்க முடியும்


Godfather_Senior
மார் 21, 2024 19:53

Yes, we believe and thats why you threatened a governor to reinstate a corruption convicted person as minister again, just because the convicted person too is, like you, an ordinary person We have lots of persons with full of brains in the judiciary but unfortunately they sold it to the red dragon, to serve them better than the Indians As the saying goes, that only a snake knows the legs of other snake, our judiciary is just very honest like our politicians No more explanations needed


Anu Sekhar
மார் 21, 2024 18:22

How come politicians with cores of corrupt money get priority to the court ? So you want all the corrupt politicians to get stay in their convictions and sentencing? So money plays an important role in the Court too Very sorry to hear the status of justice in INDIA


Veeraputhiran Balasubramoniam
மார் 21, 2024 18:10

ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கு அல்லது மக்களுக்கு நியாயம் கீடைக்க வேண்டும் என்றால் ஊழல் , லஞ்சம், சொத்து குவிப்பு போற வழக்குகளில் விடிவிப்பு, வாய்தா என தேவை இருக்காதே கண் எதிரில் அவர்களி வங்க்கி கணக்கில் பணம் , சொத்துக்கள் இப்படி நிஜமாக இருக்கும் ஒருவருக்காக் நீதிபதிகள் பரிதுரைக்க வேண்டாமே ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் கூட அவர் மீது நட வடிக்கை ஈண் ஏர்ப்பட்டது சட்டம் தன் கடமியய் ஒழுங்க்காக செய்யாததால் தால் நீதி கள் விற்க்கப்படுகிறது இன்று வரை


fox
மார் 21, 2024 17:09

ponmudi vazhakkin theerpai paarthalae therigiradhu


RAMAKRISHNAN NATESAN
மார் 21, 2024 16:53

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து கவர்னர் ரவி நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்


Kanagaraj M
மார் 21, 2024 16:46

naam tamilar katchi sinnam enna aanathu?


மேலும் செய்திகள்