உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.3,500 கோடி: போட்டித்தேர்வில் தேசிய தேர்வு முகமை சம்பாதித்த தொகை!

ரூ.3,500 கோடி: போட்டித்தேர்வில் தேசிய தேர்வு முகமை சம்பாதித்த தொகை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போட்டி தேர்வுகள் நடத்தியதன் மூலம் தேசிய தேர்வு முகமை ரூ.3,512 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவு தேர்வான க்யூட், இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வு உள்ளிட்டவற்றை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு, மத்திய பா.ஜ., அரசால் உருவாக்கப்பட்ட, தேசிய தேர்வு முகமைக்கு, இதுவரை ரூ. 3,512 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ராஜ்யசபாவில் தகவல்

இது தொடர்பாக, ராஜ்யசபாவில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பேசியதாவது: 2021-22ம் ஆண்டில், தேசிய தேர்வு முகமைக்கு ரூ.490 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2022-23ம் ஆண்டில் ரூ.873 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூ.1,065 கோடியும் வருமானம் கிடைத்துள்ளன. இதுவரை ரூ. 3,512 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. வருமானம் ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகளை நடத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஆக 02, 2024 17:21

நுழைவுக்கட்டணம்னு 100 காலி இடங்களுக்கு 100 கோடி வசூல்.பண்ணிருவாங்க. பாவம் வேலை தேடுபவர்கள்.


MP.K
ஆக 02, 2024 15:12

மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டது


Rengaraj
ஆக 02, 2024 14:51

ஒருதேசிய முகமை கடந்த ஐந்து வருடங்களில் தேர்வு நடத்துவதன் மூலமாக வருடத்துக்கு தோராயமாக அறுநூறு முதல் எழுநூறு வரை வருமானம் ஈட்டியிருக்கிறது என்றால் இந்த மாதிரி முகமை இல்லாத நாட்களில் ஒரு மாணவன் ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு சென்று தேர்வு எழுத எத்தனை பணம் செலவளித்திருப்பான்.? நுழைவு தேர்வுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நடத்தி ஒவ்வொரு மாணவரிடமும் எவ்வளவு பணம் வசூலித்திருக்கும் ? குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்காக தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் எவ்வளவு பணம் வசூல் பண்ணப்பட்டிருக்கும் ? அப்படிப்பட்ட கல்விநிறுவனங்களே அரசியல்வாதிகளின் துணையோடு தற்போது நீட் உட்பட நாடு முழுவதுக்குமான ஒரே தேர்வு முறையை எதிர்க்கின்றன .


Barakat Ali
ஆக 02, 2024 14:48

போட்டித்தேர்வுகள் என்பவையே மத்திய மாநில அரசுகள் சம்பாதிக்க நடத்தப்படுபவை என்கிற கருத்து பல ஆண்டுகளாக உள்ளது ..... SSC, UPSC, SLET, NET, TNPSC etc.


Swaminathan L
ஆக 02, 2024 14:04

இது என்ன பிரமாதம்? தேர்வு மோசடிகளில் இதை விட அதிகமாகச் சம்பாத்தியம் ஆகியிருக்குமே?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை