| ADDED : மார் 31, 2024 06:30 AM
மாண்டியா, : ''ஏப்ரல் 3ல், மாண்டியாவிலேயே என் முடிவை அறிவிப்பேன்,'' என எம்.பி., சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:தொண்டர்களை நோகடிக்கும் விதமாக, நான் முடிவு எடுக்கமாட்டேன். ஏப்ரல் 3ம் தேதி, மாண்டியாவிலேயே என் முடிவை அறிவிப்பேன்.வேறு தொகுதியில் போட்டியிட, பா.ஜ., எனக்கு 'ஆபர்' கொடுத்தது. ஆனால் மாண்டியா மக்களே, எனது சக்தி. இவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், அம்பரிஷ் மீதுள்ள அன்பினால், கடந்த தேர்தலில் செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு இல்லாமல், என்னால் வெற்றி பெற முடிந்தது.இதுவரை நான் சொன்னபடி நடந்து கொண்டேன். மாண்டியா மாவட்டத்துக்கு, என்னால் முடிந்த வரை சேவை செய்தேன். மாவட்டத்தின் பெருமையை, லோக்சபாவிலும் எடுத்துரைத்தேன். மாண்டியாவுடன் எனக்கு இருப்பது, வெறும் அரசியல் ரீதியான சம்பந்தம் அல்ல; உணர்வு பூர்வமான சம்பந்தம்.மாண்டியாவே எனக்கு வேண்டும். மக்களுக்கு நன்றி கடனை தீர்க்க வேண்டும். அரசியல் வரும், போகும். என் முடிவு மாண்டியா மக்களுடன் இருக்கும். இது குறித்து, ஆலோசிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், மாவட்ட மக்களுக்கு தெரிவிப்பது என் கடமை.மக்களின் ஆசியால் என் அரசியல் வாழ்க்கை துவங்கியது. 30 ஆண்டுகளாக அம்பரிஷை ஆதரித்தவர்கள், என்னுடன் உள்ளனர். எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட தன்னம்பிக்கை ஏற்படுத்தினர்.இவ்வாறு அவர்கூறினார்.