உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p5ou6k3h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் கடந்த 32 மாதங்களில் 48 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
ஜூலை 16, 2024 22:05

இரும்பு கரம் கொண்டு தீவிரவாதம் அழிக்க பட வேண்டும்.


மோகனசுந்தரம்
ஜூலை 16, 2024 12:35

இப்படி நடப்பது நல்லதுக்கு தான். திடீரென்று ஒரு நாள் பி ஒ கே நம்முடைய வசமாகும். அதற்காக தான் மத்திய அரசு விட்டுப் பிடிக்கிறது என்று தோன்றுகிறது.


subramanian
ஜூலை 16, 2024 22:03

மோகனசுந்தரம் , என்ன சொல்றீங்க? தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நான்கு வீரர்கள் பலி ஆனது எப்படி நல்லது?


Nandakumar Naidu.
ஜூலை 16, 2024 12:28

I.N.D.I கூட்டணி கொஞ்சம் அதிகமாக தொகுதிகளில் வென்றதற்கே இப்படியென்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்று அடுத்த தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டும்.


JeevaKiran
ஜூலை 16, 2024 10:40

48 வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அப்போ குறைந்தது 500 தீவிரவாதிகள் பலியாகிருக்கணும். ஆனால் அப்படி நடக்கவில்லையே? அப்போ, நம்முடைய ராணுவத்தில் இன்னும் போதுமான நுட்பம் இல்லை. இனிமேலும் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கணும்.


Sampath Kumar
ஜூலை 16, 2024 10:26

இதில் இறந்த வீர்கள் தமிழ் நாட்டை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என தெரிகிறது


Apposthalan samlin
ஜூலை 16, 2024 10:09

தீவிரவாதிகளை அடக்க முடியவில்லை


N Sasikumar Yadhav
ஜூலை 16, 2024 11:02

தேசத்திற்கு எதிரான உங்கள மாதிரியான ஆட்கள் அதிகமாக அங்கே இருக்கிறார்கள்


N.Purushothaman
ஜூலை 16, 2024 10:09

எதிர்க்கட்சிகளின் பலம் கொஞ்சம் கூடியவுடன் எல்லையில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்கிறதே ...


vijai
ஜூலை 16, 2024 12:43

சரியா சொன்னீங்க 99 எல்லாம் அதிகம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை