உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்த நிலையில், அதைக்காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக் கொண்டார்.அவரை வெளியில் தூக்க உறவினர்கள் நால்வர் கிணற்றில் குதித்தனர். இதையடுத்து 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
ஏப் 10, 2024 22:19

மனித நேயத்துடன் செயல்பட்ட ஐந்து பேரின் ஆன்மா சாந்தியடையட்டும் ! ஆழ்ந்த இரங்கல்...ஆழ்ந்த இரங்கல்...ஆழ்ந்த இரங்கல்...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ