உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்-.,30க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: என்.டி.எம்.சி.,

செப்-.,30க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: என்.டி.எம்.சி.,

புதுடில்லி,:'செப்டம்பர் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால், வரித்தொகையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்' என புதுடில்லி முனிசிபல் கவுன்சில் அறிவித்துள்ளது.இதுகுறித்து, என்.டி.எம்.சி., எனப்படும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:புதுடில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிக்குள் வசிப்போரின் சொத்துக்களுக்காகன் மதிப்பீட்டு வரிப் பட்டியல் என்.டி.எம்.சி., இணையதளமான www.ndmc.gov.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் தங்கள் பயனர் விவரம் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்துக்குள் செல்ல வேண்டும்.அதில் தங்கள் சொத்து மற்றும் வரித் தொகையை சர்பார்த்து, வரித்தொகையை ஆன் - லைன் வாயிலாகவே செலுத்தலாம். வரி செலுத்துவோர் கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி செலுத்தோருக்கு அந்த தொகையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். அரசு சொத்துக்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை