உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடுமைக்கு முடிவே இல்லையா: 6 வயது சிறுமிக்கு துன்புறுத்தல்; பள்ளி ஊழியர் கைது

கொடுமைக்கு முடிவே இல்லையா: 6 வயது சிறுமிக்கு துன்புறுத்தல்; பள்ளி ஊழியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நொய்டா: உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

வலுக்கும் குரல்

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக, கோல்கட்டா சம்பவத்தை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று முன்தினம் (செப்.,03) வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

புகார்

அப்போது, பள்ளியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இது தொடர்பாக தனது பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளார். அதன்பேரில், போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

கைது

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியரை கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து சிறுமி, பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaran
அக் 04, 2024 09:26

காமம் தூண்டி விடப்படுகிறது...இன்டர்நெட் , ஸ்மார்ட்போன், யூடுப் , போர்னோகிராபி , சினிமா மற்றும் ஆப் மூலமாக 30 நிமிட கள்ள உறவு காதல் படங்கள், இத்யாதி... இது தவிர மட்டன் பிரியாணி , சிக்கன் பிரியாணி , வ்ய்ன் ஷாப் ... மேலே கூறிய அவ்வளவும் அன்லிமிடெட் ... அப்போ இந்த மாதிரி குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்... மதம் மூலமாக கடைபிடித்த ஒழுக்கங்கள் எல்லாம் பிற்போக்கு என்று சொல்லி .. சுதந்திரம் , செகுலரிஸ்ம் முற்போக்கு என்று கடைபிடிக்கிறோம் ... அரசாங்கம் , கோர்ட் சட்டம் இயற்றும் ...தண்டனை குடுக்கும் ....ஒழுக்கம் சொல்லி தராது ... நாம்தான் கடைபிடிக்கவேண்டும்...


Nagarajan D
செப் 05, 2024 13:23

எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை சுட்டு தள்ளவேண்டும்...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 10:41

அந்த ஊழியர் பெயரென்ன கோவாலு ???? மர்ம நபர்தானே ????


sankaran
செப் 05, 2024 09:07

இன்டர்நெட், ஸ்மார்ட் போன் , யூடுப் , போர்னோகிராபி எல்லாம் உள்ளங்கையில் கிடைக்கிறது ... ஆபாச சினிமாக்கள்... இது எல்லாம் முக்கிய காரணம்... இதை கன்ட்ரோல் பண்ணுவதற்கு யாருக்கும் தைர்யம் இல்லை .. அப்போ இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்...


அஸ்வின்
செப் 05, 2024 08:38

நாடும் ஆட்சியாளரும் சட்டமும் நாசமா போகுது


ajp
செப் 05, 2024 08:15

இதை பெரிதுபடுத்த மாட்டார்கள். ஏனெனில் இது உபி.


Sampath Kumar
செப் 05, 2024 07:59

இராவணன் ஜென்ம பூமியாக மாறி விட்டது என்று சாங்கி சொங்கிகள் புலம்புவது கேக்கிறது


Velan Iyengaar
செப் 05, 2024 07:50

இது குறித்து திரௌபதி முர்மு எதாவது பேசுவார்களா ?? ராமராஜ்யம்


N Sasikumar Yadhav
செப் 05, 2024 08:20

உங்க திராவிட மாடல் அரசில் கிருஷ்ணகிரி கிங்ஸ்லி பள்ளியை முதலில்பாரு பிறகு மற்ற மாநிலங்களை பார்க்கலாம்


ديفيد رافائيل
செப் 05, 2024 07:41

இந்த மாதிரியான news தான் அடிக்கடி வந்துட்டே இருக்கு. பாதுகாப்பே இல்லாம போச்சா சமீபகாலமாக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை