| ADDED : ஆக 10, 2024 12:56 AM
புதுடில்லி, ''ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட 69 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்,'' என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:ரஷ்ய ராணுவத்தில் 91 இந்தியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், எட்டு பேர் இறந்துள்ளனர்; 14 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் மீதம் உள்ள 69 இந்தியர்களும் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவித்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிபர் புடினிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இவ்வாறு கூறினார்.