உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவிக்கு 6வது டெலிவரி... செலவுக்கு மகனை விற்க முயற்சி; தந்தை உட்பட 5 பேர் கைது

மனைவிக்கு 6வது டெலிவரி... செலவுக்கு மகனை விற்க முயற்சி; தந்தை உட்பட 5 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த முடியாத நபர், தன் 3 வயது மகனை விற்க முயன்றார். இது தொடர்பாக, தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரசவம்

உ.பி., பர்வா பாட்டியைச் சேர்ந்த ஹரீஸ் படேல் என்பவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் 6வது குழந்தை பிறந்துள்ளது. தினக் கூலி தொழிலாளியான ஹரீஸ் படேலால், மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரது மனைவியையும், குழந்தையையும் மருத்துவமனையில் இருந்து அனுப்ப மருத்துவ ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

விற்பனை

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த அவரிடம், 3 வயது மகனை விற்பனை செய்தால், மருத்துவமனையின் சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்தவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். வேறுவழியில்லாமல் குழந்தையை விற்க ஹரீஸ் படேலும் சம்மதித்துள்ளார்.

கைது

இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தரகர் அமரீஸ் யாதவ், குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் போலா யாதவ் - கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா, மருத்துவமனை உதவியாளர் சுகந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
செப் 08, 2024 18:35

ஒரு சாதாரண அறிவுள்ளவன் கூட தனது வருமானம் எவ்வளவு அதன் படி குடும்ப பெருக்கத்தில் ஈடுபடுவான், ஒரு குழந்தைக்கு பிறகு உடனே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வான். 6ஆவது குழந்தை வரை கொண்டு சென்று மூன்றாவது குழந்தையை விற்பானாம்?????


rsudarsan lic
செப் 08, 2024 12:34

இனிமேல் அவருக்கு இலவச உணவு கிடைக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முடிவை தேடிக்கொள்ளும்


வைகுண்டேஸ்வரன்
செப் 08, 2024 11:36

நல்ல வேளை, இவர் இந்து. இதுவே இவர் முஸ்லிமாக இருந்திருந்தால், இங்கே கும்மி, கோலாட்டம் எல்லாம் பார்த்திருக்கலாம். வட போச்சே


Kumar Kumzi
செப் 08, 2024 14:15

இனப்பெருக்கம் செய்வதில் உனது கூமுட்ட கூட்டத்தால் உலகமே நாறி போயி கெடக்கு பேரு மறந்துடுச்சா மூர்க்கு ஹாஹாஹா


Ms Mahadevan Mahadevan
செப் 08, 2024 10:35

அங்கு அரசு மருத்துவ மனைகள் இல்லையா? கூலி தொழிலாளிக்கு யாரும் குடும்ப கட்டுப்பாடு குறித்து த்ரிவிக்கவில்லையா? அரசு விளம்பரம் இல்லையா?


அப்பாவி
செப் 08, 2024 10:33

கைது எதுக்கு செய்யுறீங்க. அவரது மருத்துவ செலவை குடுத்திருக்கலாம்ல. நல்கவேளை அவர் மேலே புல்டோசர் ஏத்தாம இருந்தீங்களே.


Kasimani Baskaran
செப் 08, 2024 09:39

என்ன கொடுமை சரவணன்..


Shekar
செப் 08, 2024 09:35

....அறிவு இல்லாதவை, நாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்னும் மானிடர்கள் இவர்கள்.


Raghav
செப் 08, 2024 09:31

They should perform family planning operation to the concerned father.


chennai sivakumar
செப் 08, 2024 09:08

குழந்தை பிறந்தவுடன் அதன் அன்னையின் ஆதாரில் பதிவு செய்ய மருத்துவ மனை ஆதார் மையத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று முறை டெலிவரிக்கு பிறகு குடும்பக்கட்டுப்பாடு கட்டாயமாக்க படவேண்டும் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சக்தி வாய்ந்த காரணிகளாக கணினி முறை மற்றும் ஆதார் கொண்டு நிச்சயம்.நிறைவேற்றினால் மட்டுமே ஓரளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை