உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பெண் உட்பட 7 பேர் கைது

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பெண் உட்பட 7 பேர் கைது

துமகூரு : குழந்தை கடத்தலில் ஈடுபட்ட, இரண்டு பெண் செவிலியர்கள் உட்பட, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.துமகூரு, குப்பி டவுனில் வசிக்கும் தம்பதியின் 11 மாத ஆண் குழந்தையை, கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரில், குப்பி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டது.இது தொடர்பாக, தனியார் மருத்துவமனையில் செவிலியர்களாக வேலை செய்யும் பூர்ணிமா, சவுஜன்யா, இவர்களின் கூட்டாளிகள் மகேஷ், மெஹபூப் பாஷா, ராமகிருஷ்ணா, ஹனுமந்த ராஜ், முபாரக் பாஷா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு கார், 50,000 ரூபாய் ரொக்கம், நான்கு மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.விசாரணையில் தெருவின் முன்பு தனியாக நின்று விளையாடும் குழந்தைகளை குறிவைத்து கடத்தியதும், அந்த குழந்தைகளை விற்பனை செய்ததும் தெரிந்தது. இதுவரை அவர்கள் ஒன்பது குழந்தைகளை கடத்தி உள்ளனர். இதில் ஐந்து குழந்தைகளை போலீசார் மீட்டு உள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் யார் என தெரியாததால், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விடப்பட்டுள்ளனர். மேலும் நான்கு குழந்தைகளை மீட்க முயற்சி நடந்து வருகிறது.இதுதவிர திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண்கள், தகாத உறவில் பிறந்த குழந்தைகளையும், இந்த கும்பல் விற்பனை செய்து பணம் சம்பாதித்தது தெரிந்தது.கைதான ஏழு பேரிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை