உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்

நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்

புதுடில்லி: இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஆறு தேர்வு மையங்களைச் சேர்ந்த 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. அந்த மாணவர்களுக்கு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு 30ல் வெளியாகும். விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என தேசிய தேர்வு முகமை கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று(ஜூன் 23) நடந்த நீட் மறுதேர்வில் 813 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 750 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதற்கிடையே, ஏற்கனவே நடந்த நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 63 மாணவர்களை, தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதில் 17 பேர் பீஹாரையும், 30 பேர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nagercoil Suresh
ஜூன் 24, 2024 05:36

ரயிலில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் ஏறி உட்க்கார்ந்து இருந்துகொண்டு வாக்குவாதம் செய்பவர்கள். இந்திய மருத்துவத்துறை முன்னேறிய நாடுகளை பின்னுக்கு தள்ளும் நிலையில் இருந்தது அதை கேவலப்படுத்திவிட்டார்கள், இதன் பாதிப்பு வரும் காலங்களில் எதிரொலிக்கும், தேர்வுகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்தால் அது தேறாது..இவைகளை தடுப்பதற்கு மாநிலங்களிடமே கொடுத்துவிடலாம், அல்லது லட்ச்சக்கணக்கான பூலிலிருந்து கடைசி நேரத்தில் கேள்விகளை கம்ப்யூட்டர் சிஸ்டம் தேர்வு செய்வதாக இருத்தல் வேண்டும்... 17 பேர் பீஹாரையும், 30 பேர் குஜராத்தையும் குஜராத்தையும் சேர்ந்தவர்களை மட்டும் பிடித்து தண்டனை கொடுப்பது லீக் ஆன ஓட்டை பானையை வெளிப்புறத்தில் அடைப்பதற்கு சமம்..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி