உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ராஜினாமா இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்

8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ராஜினாமா இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று பா.ஜ.,வில் ஐக்கியமாயினர்.70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபைக்கு, வரும் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5vcq0spx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஆளும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர், நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் நிவாஸ் கோயலுக்கு அனுப்பினர்.இன்று (01.02.2025) எட்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ., தேசிய துணை தலைவர் பைஜெயந்த்பாண்டா மற்றும் பா.ஜ., டில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கிமானதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
பிப் 02, 2025 10:51

பொழக்க தெரிஞ்ச ஆளுங்க போல.. அதான் ஜம்புடு..


Ramona
பிப் 01, 2025 19:35

இவர்களால் என்ன பிரயோஜனம்..தண்டங்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்


Ganesun Iyer
பிப் 01, 2025 20:52

உக்காருங்க 38பேரு கேண்டின்ல முந்திரி பக்கோடா சாப்பிட்டிட்டு இருக்காங்க அந்த மாதிரிதான் இதுவும்.