உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

சிக்கமகளூரு : பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆச்சார்யா, கோவில் பணிக்காக, 85,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, உடுப்பிக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் கோட்டிகேஹார் சோதனைச்சாவடியில் இவரது வாகனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அவரிடம் 85,000 ரூபாய் ரொக்கம் இருந்தது குறித்து விளக்கம் கேட்டனர். பணத்துக்கான ஆவணங்களைஅவர் காண்பித்தார்.ஆனாலும், தேர்தல் அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, பனகல் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை