வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது டபுள் டெக்கர் பஸ் அல்ல.. ஸ்லீப்பர் பஸ்..டபுள் டெக்கர் பஸ்ஸை அதிவேகமாக இயக்குவது கடினம்.. கன்ட்ரோல் ஒழுங்காக கிடைக்காது...
லக்னோ; உ.பி.யில் டபுள் டெக்கர் பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் கனோஜ் மாவட்டம் ஆக்ரா-லக்னோ விரைவு சாரையில் 40 பயணிகளுடன் டபுள் டெக்கர் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு லாரி டிரக்கில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டு கொண்டிருந்தது.தண்ணீர் லாரி நிறுத்தப்பட்டதை பஸ் டிரைவர் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அசுர வேகத்தில் வந்த பஸ், லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 9 பேர் பலியாகினர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பஸ்சும், லாரியும் பெரும் சேதம் அடைந்தது. அதே நேரத்தில் அவ்வழியே உ.பி. மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் ஸ்வதந்திரதேவ் சிங் சென்றுகொண்டிருந்தார். விபத்தைக் கண்ட அவர் உடனடியாக தமது பாதுகாவலர்களை அனுப்பி, சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்தார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பஸ் டிரைவர் தூங்கிவிட்டதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
இது டபுள் டெக்கர் பஸ் அல்ல.. ஸ்லீப்பர் பஸ்..டபுள் டெக்கர் பஸ்ஸை அதிவேகமாக இயக்குவது கடினம்.. கன்ட்ரோல் ஒழுங்காக கிடைக்காது...