உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து 9 பேர் பலி; 60 பேர் படுகாயம் பயணியர் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியது

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து 9 பேர் பலி; 60 பேர் படுகாயம் பயணியர் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியது

கோல்கட்டா, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி அருகே, நின்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது, வேகமாக வந்த சரக்கு ரயில் பின்னால் இருந்து மோதியது. இதில், பயணியர் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் துாக்கி வீசப்பட்டு கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவை அடுத்துள்ள சியால்தா இடையே இயக்கப்படும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை 9:00 மணியளவில் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது, அதே பாதையில் வேகமாக வந்த சரக்கு ரயில், பயணியர் ரயில் மீது பின்னால் இருந்து வேகமாக மோதியது. இதில், பயணியர் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகளான, இரண்டு பார்சல் பெட்டிகள், ஒரு கார்டு பெட்டி ஆகியவை துாக்கி எறியப்பட்டன. பயணியர் ரயிலுக்குள், சரக்கு ரயிலின் இன்ஜின் உட்புகுந்தது. இந்த கோர விபத்தில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சரக்கு ரயிலின் டிரைவர், துணை டிரைவர் மற்றும் பயணியர் ரயிலின் கார்டு ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.பயணியர் ரயில் சிக்னலுக்காக காத்திருந்த நிலையில், சரக்கு ரயிலுக்கும் அதே பாதையில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு ஒடிசாவில், கோரமண்டல் தொடர்ச்சி 3ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை