உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த பாரதத்தை உருவாக்க 9 துறைகளுக்கு முன்னுரிமை

வளர்ந்த பாரதத்தை உருவாக்க 9 துறைகளுக்கு முன்னுரிமை

மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தற்போதைய உலகளாவிய கொள்கைகளில் நிச்சயமற்ற நிலை நிலவும் போதிலும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து தனித்து நிற்கிறது. ''நம் வளர்ச்சி வலுவாகவும், பணவீக்கம் குறைவாகவும், நிலையானதாகவும் உள்ளது. 4 சதவீத இலக்கை நோக்கி நகர்கிறோம்,'' என்றார்.வரும், 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஒன்பது துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.1. விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் மீள்தன்மை2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு3. மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி4. உற்பத்தி மற்றும் சேவை5. நகர்ப்புற வளர்ச்சி6. எரிசக்தி பாதுகாப்பு7. உட்கட்டமைப்பு8. கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.''இந்த ஒன்பது துறைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை பயன்படுத்தி அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும்,'' என, அமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை