உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர முதல்வர் படத்துடன் 96 வாட்ச்கள் பறிமுதல் 

ஆந்திர முதல்வர் படத்துடன் 96 வாட்ச்கள் பறிமுதல் 

சிக்கபல்லாப்பூர்: ஆந்திர முதல்வர் ஜெகனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 96 வாட்ச்கள், பாகேபள்ளி சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.லோக்சபா தேர்தலை ஒட்டி கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் உள்ள, சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. பாகேபள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள, சோதனை சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரை நிறுத்தி, சோதனை நடத்தினர்.காரின் டிக்கியில் இருந்த அட்டை பெட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட, 96 வாட்ச்கள் இருந்தன. வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து 96 வாட்ச்களை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவின் பாண்டி, நாகேந்திரா ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ