உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறவை காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பாதிப்பு

பறவை காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பாதிப்பு

புதுடில்லி, மேற்கு வங்கத்தில், 'எச்9என்2' எனப்படும், பறவை காய்ச்சலால் 4 வயது சிறுமி பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அச்சிறுமி, மூன்று மாத தொடர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளது.உலகம் முழுதும் பறவை காய்ச்சல் பல்வேறு திரிபுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் இடையே பரவி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் 4 வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரியில் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மூன்று மாத தொடர் சிகிச்சைக்கு பின், அச்சிறுமி அப்பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பினார் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டு சுற்றுப்புறங்களில் கோழிப் பண்ணை இருந்ததால், இந்த வைரஸ் பாதிப்பு தாக்கியது தெரியவந்துள்ளது. எனினும், சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கோ சுவாசக் கோளாறு ஏற்படவில்லை. சிறுமியை தாக்கிய எச்9என்2 என்ற இன்ப்ளூயன்ஸா வைரஸ், வேகமாக பரவும் தன்மை உடையது அல்ல. இந்த வகை வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, 2019ல் எச்9என்2 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை